பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர் குறித்து சாச்சனா கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது/ விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி டிவியில் தொடங்கி 11வது வாரம் தொடங்கி 73 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார்.

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும் பொறாமையும் வெடித்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் புது டாக்ஸ்கை கொடுத்திருந்தார். இந்த டாஸ்கில் ராணவுக்கு தோள்பட்டையில் பயங்கரமாக அடிபட்டு இருந்தது. ராணவ் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது கூட சவுந்தர்யா, அவன் நடிக்கிறான், டிராமா போடுகிறான் என்றெல்லாம் பேசி இருந்தார். அதற்குப்பின் ராணவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்கு பின் ராணவ் மூன்று வாரத்திற்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னதாக பிக் பாஸ் கூறியிருந்தார்.

சாச்சனா பேட்டி:
இதனால் போட்டியாளர்கள் வருத்தப்பட்டு ராணவிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்கள். இப்படி கலவரத்துடன் நிகழ்ச்சி சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு சோசியல் மீடியா லைவில் சாச்சனா, வெளியில் இந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் பக்கத்தில் ஒரு கோயிலுக்கு போனேன். அப்போது என்னிடம் ஒரு அம்மா, நீங்கள் நல்லா விளையாடியிருந்தீர்கள் என்று சொன்னார். நெகட்டிவ் விமர்சனங்களும் வருகிறது. இருந்தாலுமே பாசிட்டிவான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.

நிகழ்ச்சி குறித்து சொன்னது:
கண்டிப்பாக முத்துக்குமரன் அண்ணா பைனலுக்கு போவாரு. எனக்கு முத்துக்குமார் அண்ணனுக்கு பிறகு விஷால் அண்ணாவை ரொம்ப பிடிக்கும். அவர் வீட்டுக்குள் ரொம்ப அமைதியாக இருக்காருன்னு தெரிந்து கொண்டேன். ஆனால், வெளியில் வந்து பார்க்கும்போதுதான் அவர் மற்றவர்களை விட அமைதியாக இருக்கிற மாதிரி தெரிகிறது. 63 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்ததனால் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. என்னுடைய வாழ்க்கையில் இந்த அனுபவம் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

டைட்டில் வின்னர்:
முத்து அண்ணா ரொம்ப திறமையானவர். நல்ல மனசும் கொண்டவர். சொல்லப்போனால் அவர்தான் இந்த சீசனோட வலிமையான பிளேயர் என்று சொல்லலாம். இந்த சீசனுடைய டைட்டில் வின்னர் கண்டிப்பாக முத்து அண்ணன் தான். ராணவ் அண்ணாவோட அப்பாவி தனம் எனக்கு பிடிக்கும். மஞ்சரி அக்காவிடம் நேர்மை இருக்கிறது. எந்த விஷயமாக இருந்தாலும் வெளிப்படையாக சொல்லி விடுவார். பிக்பாஸுடைய குரலை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். மேலும், விஜய் சேதுபதி சார் ரொம்ப வெச்சி செய்கிறார். இதுவரைக்கும் அவருடன் ஜாலியாக பார்த்து பேசி இருக்கிறேன். ஆனால், இனிமேல் அவருடன் பேசுவதற்கு பயம் இருக்கு என்று நினைக்கிறேன்.






