விஜய் சேதுபதி மீது பிக் பாஸ் பிரபலம் தர்ஷா குப்தா வைத்திருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி நான்கு வாரம் முடிந்து 31 நாள்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேறி இருந்தார். இரண்டாவது வாரம் அர்னவ் வெளியேறி இருந்தார். மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா வெளியேறி இருந்தார்.
பிக் பாஸ் 8:
இந்த நான்காவது வாரம் எலிமினேஷன் நடக்கவில்லை. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. அதன் பின் நிகழ்ச்சியை மேலும் சுவராசியமாக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக 6 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து இருக்கிறார்கள். அதில் மாடல் அழகி வர்ஷினி வெங்கட், சீரியல் நடிகர் ராயன், நடிகரும் மாடலும் ஆன ராணவ், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, ரியா தியாகராஜன், சுஜா வருணியின் கணவர் சிவக்குமார் ஆவார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:
பின் ஐந்தாம் வாரத்திற்கான நாமினேஷனில் முத்துக்குமரன், தீபக், விஷால், ரஞ்சித், அருண், ஜாக்லின், பவித்ரா, சாச்சனா, ஆனந்தி, அன்ஷிதா, சுனிதா ஆகியோர் பெயர் இடம் பிடித்து இருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளிவந்த பிறகு தர்ஷா குப்தா அளித்த பேட்டியில் போட்டியாளர்கள் குறித்து நிறைய விஷயங்களை மனம் திறந்து பேசி இருந்தார். அப்போது விஜய் சேதுபதி குறித்து கேட்டதற்கு, விஜய் சேதுபதி யாரையுமே பேச விடுவதே இல்லை.
https://www.youtube.com/watch?v=mytFhm0PDMo
விஜய் சேதுபதி குறித்து சொன்னது:
ஏதாவது பேச எழுந்தாலுமே நோஸ்கட் செய்து உட்கார வைத்து விடுவார். தொடர்ந்து அசிங்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அவரிடம் பேசவே பயமாகே இருக்கிறது என்றெல்லாம் கூறியிருந்தார். இப்படி
விஜய் சேதுபதி மீது வைத்த குற்றச்சாட்டுக்கு காரணம், தர்ஷா நிகழ்ச்சியை விட்டு வெளிவந்த பிறகு பெண் போட்டியாளர்களை மோசமாக விமர்சித்து பேசி இருந்தார். உடனே அதற்கு விஜய் சேதுபதி கண்டித்திருந்தார். இதையெல்லாம் வைத்து தான் இவர் இப்படி கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது.

தர்ஷா குப்தா குறித்த தகவல்:
மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் இளசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர். இவர் ஜி தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி இருந்த “முள்ளும் மலரும்” என்ற தொடரின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின் இவர் மின்னலே, செந்தூரப்பூவே போன்ற சில தொடர்களில் நடித்து இருந்தார். பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் மூலம் தான் இவருக்கு சினிமா பட வாய்ப்பு கிடைத்தது.






