பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் ஜாக்குலின் கதறி அழுது வெளியேறிய வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 103 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித், ஜெப்ரி, அன்ஷிதா, ராணவ், மஞ்சரி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.
பிக் பாஸ் 8:
அதன் பின் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் ராயன் தான் வெற்றி பெற்றார். நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்குவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டி, சண்டை, சச்சரவு எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து ஏற்கனவே வெளியே போயிருந்த போட்டியாளர்களில் எட்டு பேர் உள்ளே சென்று இருந்தார்கள். பிக் பாஸ் வீடே ரணகளமாக இருந்தது. அதன் பின் கடந்த வாரம் அருண் பிரசாத், தீபக் வெளியேறி இருந்தார்கள். இவர்களுடைய எவிக்சன் பலருக்குமே அதிர்ச்சி தான்.
#Jacquline full evited video
— Bigg Boss Vignesh (@BiggBossVignesh) January 16, 2025
really kastama irrukku 😥😥😥#sathya #jeffry Worst Da Neega #muthu ku sonna words innum kastama irrukku
More Updates Followed By @BiggBossVignesh Thank You#biggbosstamil8 #biggbosstamil pic.twitter.com/sjRiMIr49x
நிகழ்ச்சி குறித்த தகவல்:
இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக இந்த டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார். அதாவது, பிக் பாஸ் வீட்டுக்குள் வெளியே வைக்கப்பட்டிருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து விட்டால் அந்த பணத்துடனே அவர்கள் நிகழ்ச்சியில் மீண்டும் தொடரலாம். அப்படி இல்லாதவர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும். அந்த வகையில் இந்த டாஸ்க்கில் ராயன், முத்துக்குமரன், விஷால், பவித்ரா ஆகியோர் பணப்பெட்டி டாஸ்க்கை விளையாடி வெற்றி பெற்று விட்டார்கள். ஆனால், ஜாக்குலின் தான் இந்த டாஸ்க்கில் தோல்வி அடைந்திருந்தார்.
பணப்பெட்டி டாஸ்க்:
35 வினாடிகளில் 80 மீட்டர் தொலைவில் இருக்கும் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு ஜாக்குலின் உள்ளே வரவேண்டும். ஆனால், இரண்டு வினாடிகள் தாமதமாக வந்ததால் ஜாக்குலின் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார். இது எல்லோருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. பின் ஜாக்குலின் டிராபியை உடைக்க வேண்டாம் என்று பிக் பாஸ் அறிவித்து அவருக்கு பரிசாகவே கொடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த சீசனில் 15 முறை நாமினேஷனிலும் ஜாக்குலின் பெயர் இடம்பெற்றது. இதுவரை தமிழ் வரலாற்றிலேயே இத்தனை முறை நாமினேட் செய்யப்பட்டு எலிமினேட் ஆகாத போட்டியாளர் ஜாக்குலின் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அழுது வெளியேறிய ஜாக்குலின்:
மேலும், இந்த நிகழ்ச்சியில் ஒரு நாளுக்கு இவருக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 101 நாட்கள் இருந்திருக்கிறார். மொத்தமாக இவருக்கு 25 லட்சத்தி 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பணப்பெட்டி டாஸ்கில் ஜாக்குலின் கதறி கதறி அழுதபடி வெளியேறிய வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும், ஜாக்குலின் வெளியேறும்போது மற்ற போட்டியாளர்களும் அவரை நினைத்து அழுது கஷ்டப்பட்டார்கள். ஆனால், சில போட்டியாளர்கள் அவர் வெளியேறும்போது சிரித்துக்கொண்டு பேசியிருந்தார்கள்.