பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பிறகு போட்டியாளர் ஜாக்குலின் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் தான் விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்தது. இதில் முதலில் ஜாக்குலின் உட்பட 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். அதைத் தொடர்ந்து 6 போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக பங்கேற்று இருந்தார்கள். விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டி டாஸ்கில் களம் இறங்கிய ஜாக்குலின், குறிப்பிட்ட நேரத்தில் வீட்டிற்குள் திரும்ப முடியாமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த ஜாக்குலின் தனது பிக் பாஸ் பயணம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், பிக் பாஸ் வீட்டிற்குள் சாப்பாடு இல்லாமல் முழுவதுமாக யோசித்தே எடையை குறைத்து இருக்கிறேன். யோசித்தால் பசிக்கும் ஆனால், அங்கு சாப்பாடு இருக்காது. அது பெரிய வீடு என்பதால் நடந்துக்கிட்டே இருப்போம். இப்ப கிட்டத்தட்ட நான் 10 கிலோ குறைஞ்சிருக்கிறேன். 15 வாரமும் நாமினேட் ஆகி நான் வெளியேறவில்லை. இந்த விஷயம் பிக் பாஸ் வீட்டில் யாருக்கும் நடக்கவில்லை.
ஜாக்குலின் பேட்டி:
எனக்கு இத்தனை வாரமும் மக்கள் கொடுத்த அன்பே நிறைவாக இருக்கிறது. மேலும், முத்து டைட்டில் ஜெயிச்சதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம். அதற்கு அவன் தகுதியானவன். அவன் ஒவ்வொரு நாளும் அதற்காக பயங்கரமாக உழைத்தான். நான் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது என்னுடைய குரலால் சில விமர்சனங்களை சந்தித்தேன். என்னை மாதிரி ஒரு பெண் குரலால விமர்சனங்களை சந்தித்து இருக்கான்னு கேள்விப்படும்போது தான் உடனடியாக சௌந்தர்யா கூட கனெக்ட் ஆனேன்.
சௌந்தர்யா குறித்து:
மேலும், சௌந்தர்யா முதல் இரண்டு வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் பயந்துட்டே இருந்தாள். அப்போது அவளுக்கு யோசிக்கிறது பிரச்சினை கிடையாது. ஆனால், யோசித்ததை பேசினால் யாராவது கிண்டல் பண்ணிடுவாங்கன்னு நினைச்சா. நான் சௌந்தர்யா கூட நின்ற மாதிரி அவங்க என் கூட நிக்கலன்னு வருத்தப்படவில்லை. ஏனென்றால், ஒருத்தர் கூட நான் எவ்வளவு பிரண்டாக இருந்திருக்கேன் தான் பார்க்க முடியும். இன்னொருத்தவங்க நம்ம கிட்ட ஏன் அப்படி இல்லன்னு யோசிக்கவே மாட்டேன். என்னை பொறுத்த வரைக்கும் பிரண்ட்ஷிப் கேமை எந்த இடத்திலும் பாதிச்சிட கூடாதுன்னு நினைத்தேன்.
மஞ்சரி குறித்து:
ஆனால், சில இடங்களில் நம்மளும் மனுஷங்க தான், ஏன் நமக்காக யாரும் வரலைன்னு தோணிச்சு தான். ஆனால், அவங்களோட சூழ்நிலையையும் நான் அப்போது புரிஞ்சுகிட்டேன். மஞ்சரி ரொம்பவே ஒரு நேர்மையான நபர். கோபம், வெறுப்பு, அன்புனு எந்த விஷயத்தையும் அவங்க மனசுக்குள்ளேயே வச்சுக்க மாட்டாங்க. அது அவங்க மூஞ்சிலேயே தெரிஞ்சிடும். நான் மஞ்சரி கூட ஒட்டிக்கிட்டேன்னு எல்லாரும் சொன்னாங்க. ஆனால், நான் மஞ்சரி கூட போய் பேசல. அவங்களே தான் என்கிட்ட பேசினாங்க. அப்போதான் அவங்களுக்கு அன்பு தேவைப்படுதுன்னு புரிஞ்சுகிட்டேன். மேலும், சத்யாவும் ஜெஃப்ரியும் நான் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும்போது மத்தவங்க அழுததை பார்த்து சிரிச்சதா சொன்னாங்க.
சத்யா மற்றும் ஜெஃப்ரி குறித்து:
அவங்க என்ன காரணத்திற்காக வேணாலும் சிரித்து இருக்கலாம். அதைக் கேட்பதற்கு நான் யாரு?. நான் வெளியில போகும்போது அழுகணும்னு சொல்றதுக்கு நான் யாரு? அவங்க ரெண்டு பேரையும் தப்பா பேசாதீங்க. அது அவங்களோட எமோஷன். என்னுடைய எவிக்ஷன் உங்களுக்கு கஷ்டமாக இருந்திருக்கலாம். அதற்காக பக்கத்துல இருக்கவங்களுக்கும் கஷ்டமாக இருக்கணும்னு அவசியம் கிடையாது. மேலும், நான் பிக் பாஸ் போகும்போது விஜய் சேதுபதி சார் கிட்ட, மிடில் பெஞ்சில் ஓகே வாங்கி ஒரு மாதிரியா ஆயிடுச்சு, நான் குட் வாங்கணும்னு சொல்லி இருக்பேன். நான் வெளியேறும்போது பிக் பாஸே, ‘யூ ஆர் மை ஃபஸ்ட் பெஞ்ச்’னு சொல்லிட்டாரு. அந்த வார்த்தைகள் எல்லாம் நான் வெளியேறும்போது என்னை எக்ஸ்ட்ராவா அழ வைத்தது என்று ஜாக்குலின் கூறியுள்ளார்.