‘பனிவிழும் மலர்வனம்’ சீரியலில் இருந்து வெளியேறிய பிக் பாஸ் ராயன், ஏன் தெரியுமா?

0
109
- Advertisement -

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பிறகு தான் நடித்துக் கொண்டிருந்த சீரியலில் இருந்து ராயன் விலகி இருக்கும் செய்திதான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவி பிக் பாஸ் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, ரஞ்சித், விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாளிலிருந்தே ராயன் சிறப்பாக விளையாடி வந்தார். மேலும், சிறப்பாக விளையாடி டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் கூட ராயன்தான் வெற்றி பெற்றார். இதனால் ரசிகர்களிடையே இவருக்கு ‘டாஸ்க் பீஸ்ட்’ என்கிற பட்டப்பெயரும் கிடைத்தது.

- Advertisement -

பிக் பாஸ் 8:

பின், நிகழ்ச்சியில் கடைசியாக பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ராயன் சிறப்பாக விளையாடி ரூபாய் 8 லட்சம் வரை வென்றார். ஆனால், இந்த நிகழ்ச்சியில் கடைசியில் ராயன் நான்காம் இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் எதிர்பார்த்தபடி இந்த முறை முத்துக்குமரன் தான் டைட்டில் பட்டதை வென்று கோப்பையை வாங்கி இருந்தார். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ராயன் தான் நடித்து கொண்டிருந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறாராம்.

பனிவிழும் மலர்வனம்:

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்தான் ‘பனிவிழும் மலர்வனம்’ . இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில், ஈரமான ரோஜாவே தொடரில் நாயகனாக நடித்த சித்தார்த் குமரன், பாரதி கண்ணம்மா தொடரில் நாயகியாக நடித்த வினுஷா தேவி, தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லனாக நடித்த ராயன் மற்றும் மௌன ராகம் சீரியலில் நடித்த ஷில்பா ஆகியோர் நடித்து வந்தார்கள். இந்த சீரியல் அக்கா- தம்பி மற்றும் அண்ணன்-தங்கை இடையே நடக்கும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டது.

-விளம்பரம்-

விலகிய ராயன்:

இந்நிலையில்தான் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் ராயன் , பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரியலில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது ராயன் ‘பனிவிழும் மலர்வனம்’ சீரியலில் இருந்து விலகி உள்ளாராம். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடித்த நிலையில் ராயன் படு பிஸியாக பேட்டிகள் கொடுப்பது, நண்பர்களை சந்திப்பது என பிசியாக இருக்கிறாராம். அதோடு, சில படங்களில் கமிட்டாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் இந்த சீரியலில் இவருக்கு பதில் நடிகர் தெஜாங்க் கமிட்டி ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த செய்திதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mr. ஹவுஸ் கீப்பிங்:

மேலும், பிக் பாஸ் ராயன் நடித்துள்ள Mr. ஹவுஸ்கீப்பிங் திரைப்படம் இன்று வெளியாக உள்ளது. இயக்குனர் அருண் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் லாஸ்லியா, ஹரி பாஸ்கர், ராயன், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்களாம். இன்று வெளியாகும் இந்த படத்தில் ராயனின் நடிப்பை பார்ப்பதற்கு அவரின் பிக் பாஸ் ரசிகர்கள் தற்போது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement