பிக் பாஸ் சௌந்தர்யா குறித்து அவர் தோழி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி டிவியில் தொடங்கி 11வது வாரம் தொடங்கி 76 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும் பொறாமையும் வெடித்துக்கொண்டிருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் சௌந்தர்யா. இவர் இதற்கு முன்பே மாடலிங், சீரியல் என்று நடித்துக் கொண்டிருந்தார். அதன் மூலம் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சௌந்தர்யா அமைதியாக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல சரவெடியாக வெடித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு அட்ராசிட்டி செய்து செய்து கொண்டிருக்கிறார்.

தோழி நந்தினி ஸ்ரீதர் அளித்த பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் சௌந்தர்யாவின் தோழி நந்தினி ஸ்ரீதர் அளித்த பேட்டியில், நான் டிசைனர். என்னுடைய டிசைனுக்கு சௌந்தர்யா தான் மாடல். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என்பது அவருடைய ரொம்ப நாள் ஆசை. ஒவ்வொரு சீசன் தொடங்கும் போது முயற்சி செய்து கொண்டுதான் இருந்தார். மாடலிங், வெப்சீரிஸ், சினிமா என்று பல முயற்சிகள் செய்து கொண்டே இருக்கிறார். அவள் நிஜத்தில் எப்படி இருக்கிறாரோ, அப்படித்தான் பிக் பாஸ் வீட்டிலும் இருக்கிறார். என்னுடைய பெஸ்ட் பிரண்டு என்று இதை நான் சொல்லவில்லை. மேலும், அவர் ஸ்ட்ராங்கான போட்டியாளராக வந்து விடுவாரோ என்று பயந்த சில போட்டியாளர்கள், அவருக்கு வெளியே பி.ஆர் டிம் இருக்கு என்று பேசி இருந்தார்கள்.

சௌந்தர்யா குறித்து சொன்னது:
ஏற்கனவே சௌந்தர்யாவுக்கு சப்போர்ட் செய்தவர்கள் எல்லோருமே பிஆர் என்று சொல்ல முடியுமா? அவளுடைய குரல் பிறந்ததிலிருந்து அப்படித்தான். அது அவருடைய தவறு இல்லை. சின்ன வயதில் இருந்து இந்த குரலால் அவள் நிறைய அவமானங்கள், கஷ்டங்களை சந்தித்திருக்கிறாள். பள்ளிக்கூட நாட்களில் கூட எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்கிறார். எல்லா கஷ்டத்தையும் கடந்து தான் அவள் மீடியாவுக்கு வந்து இருக்கிறார். ஆனால், அதை பி.ஆர் ஒர்க் என்று சொல்வதெல்லாம் ரொம்ப தவறான ஒன்று. பிக் பாஸில் எட்டாவது சீசன் போய்க் கொண்டிருக்கிறது. முதல் ரெண்டு சீசன் முடிந்ததுமே மக்களுக்கு இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு தெளிவு தெரிந்திருக்கும்.

சௌந்தர்யா அம்மா-அப்பா:
அதனால் இப்ப யார் சரியாக இருக்காங்க, வீட்டுக்குள் யார் டிராமா போடுறாங்க, வெளியில் யாருக்கு பிஆர் ஒர்க் பண்ணுகிறார்கள் என்று எல்லா விஷயமும் அவர்களுக்கே புரியும். சில விஷயங்களில் அவர் தவறு செய்திருந்தாலும் அதை விஜய் சேதுபதி கண்டித்தும் அவர் அதை குறைத்துக் கொண்டிருக்கிறார். அதே நேரம் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் இவர்களில் நல்ல பிரண்ட் என்று சொல்லி குழி தூண்டுகிறார்கள். அதோடு இந்த நிகழ்ச்சியை பார்த்து அவர் குரலை வைத்து இன்னும் ரொம்ப மட்டம் தட்டி பேசுவார்கள் என்று அவருடைய அம்மா, அப்பா அழுந்து கொண்டிருக்கிறார்கள். இது தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.






