-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

காலையில் அம்பி, இரவில் அந்நியன் – சௌந்தர்யாவின் நாடகம், திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

0
45

போட்டியாளர் சௌந்தர்யாவின் முகத்திரையை சுனிதா கிழித்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி இன்று 96 நாள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, ரவீந்தர் தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழிச்சி ஆரம்பமானது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித், ஜெப்ரி, அன்ஷிதா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.

பிக் பாஸ் 8 :

-விளம்பரம்-

கடந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்கில் ராயன் தான் வெற்றி பெற்றார். முத்துக்குமரன் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்று விட்டார் என்று சொல்லலாம். அதோடு கடந்த 13 வது வாரத்திற்கான நாமினேசனில் தீபக், பவித்ரா, ராணவ், ஜாக்லின், ராயன், அருண், விஷால், மஞ்சரி ஆகியோர் பெயர்கள் இடம்பெற்று இருந்தது. இதில் ராணவ், மஞ்சரி வெளியேறி இருந்தார்கள். நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்குவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டி, சண்டை, சச்சரவு எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

தற்போது பிக் பாஸ் வீட்டில் எட்டு போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து ஏற்கனவே வெளியே போயிருந்த போட்டியாளர்களில் எட்டு பேர் உள்ளே வந்திருக்கிறார்கள். அவர்களையும், இப்போது வீட்டில் இருக்கும் போட்டியாளர்களையும் மோத விட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் பிக் பாஸ். அந்த வகையில், வெளியிலிருந்து வந்திருக்கும் எட்டு பேருக்கும் உள்ளே இருக்கும் எட்டு பேருக்கும் பதில் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் ரீப்ளேஸ்மெண்ட் செய்யத் தகுதியானவர்கள் யார் யார் என்கிற டாஸ்க் பிக் பாஸால் கொடுக்கப்பட்டது.

-விளம்பரம்-

சௌந்தர்யாவை வச்சு செஞ்ச சுனிதா:

அப்போது சுனிதா, சௌந்தர்யாவை ரீப்ளேஸ் செய்ய வேண்டும் என்று கூறினார். எல்லாரும் உள்ள பிக் பாஸ் விளையாடினால், சௌந்தர்யா வெளியே விளையாடிட்டு இருக்காங்க. இவங்க விளையாட்டை வெளியில் இருக்கிறவங்களே கையாண்டுட்டு இருக்காங்க. நான் உள்ள இருக்கும்போது ரொம்ப கஷ்டப்படுற பொண்ணுனு நினைச்சிட்டு இருந்தேன். அது கிடையாது. அவங்க நடிக்கிறாங்க. இந்த வீட்ல நீங்க யாருக்காவது பயப்படனும்னா அது சௌந்தர்யாவுக்கு தான் பயப்படணும். சௌந்தர்யா மக்கள் கிட்ட ஏற்கனவே ஒரு செட்டப் பண்ணி வச்சிருக்காங்க. எனக்கு அது பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார்.

நெட்டிசன்களின் கருத்து :

பின், சுனிதாவின் கருத்துக்களை கேட்டு அன்று காலை சௌந்தர்யா அழுது நாடகம் போட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, அன்று இரவே கோபமாக நடந்து கொண்டார். அதை பார்த்த இணையவாசிகள் , ‘காலையில் அம்பி, இரவில் அந்நியன்’ என்று சௌந்தர்யாவை ட்ரோல் செய்து கமெண்ட் செய்திருக்கிறார்கள். மேலும், முன்னாள் போட்டியாளர் சனம் தனது எக்ஸ் தளத்தில், சுனிதா பிக் பாஸ் வீட்டில் சௌந்தர்யாவின் முகத்திரையை கிழித்தது சிறப்பாக இருந்தது. சுனிதா இறுதிப் போட்டியாளராக ரீப்ளேஸ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news