Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
BiggBoss 2
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பிக் பாஸ் 8ல் போட்டியாளராக களமிறங்கும் விஜய் டிவியின் சீரியல் நடிகர், யார் தெரியுமா?

எழுதியவர்subhashini24 ஆகஸ்ட், 2024 அன்று 06:36 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் சீசன் 8ல் விஜய் டிவி பிரபலம் கலந்து கொள்ள இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் ஒளிபரப்பாகும் வரலாற்று பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. இந்த நிகழ்ச்சியை முதன் முதலில் ஹிந்தியில் தான் ஒளிபரப்பி இருந்தார்கள். அதற்குப் பிறகுதான் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் 8ல் போட்டியாளராக களமிறங்கும் விஜய் டிவியின் சீரியல் நடிகர், யார் தெரியுமா?

இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சி பல பேரின் கேரியருக்கு துணையாக நின்று இருக்கிறது. அதோடு பலரின் வாழ்க்கையையும் மாற்றி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு பிக் பாஸ் வீடும் பிரபலம்தான். இந்த பிக் பாஸ் வீட்டை பார்ப்பதற்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு கூட்டம் இருக்கிறது.

கமல் விலகல்:

மேலும், கடந்த ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து சிம்பு அல்லது ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்கள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இறுதியாக நடிகர் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமிட் ஆகி உள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் சேனல் தரப்பில் இருந்து வெளியிடவில்லை.

பிக் பாஸ் 8ல் போட்டியாளராக களமிறங்கும் விஜய் டிவியின் சீரியல் நடிகர், யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 8:

இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் வேலைகளும் செய்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக சினிமா பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், யூட்யூபர்கள் என எல்லா தரப்பில் இருந்தும் சில பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ரியாஸ் கான், அமலா ஷாஜி, ரோபோ சங்கர், பாடகி கல்பனா, பப்லு ப்ரித்திவிராஜ், நடிகர் அஸ்வின் என்று பல பெயர்கள் சோசியல் மீடியாவில் அடிபட்டு வந்தது.

பிக் பாஸ் 8ல் போட்டியாளராக களமிறங்கும் விஜய் டிவியின் சீரியல் நடிகர், யார் தெரியுமா?

போட்டியாளர்கள் விவரம்:

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர் அருண் தேர்வாகியுள்ளதாக கூறப்பட்டது. அதை தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்திருந்த பரீனாவும், ஜோயா ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் 8 விஜய் டிவி பிரபலம் கலந்துகொள்ள இருக்கும் தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, சீரியல் நடிகர் தீபக் தான் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்.

பிக் பாஸ் 8ல் போட்டியாளராக களமிறங்கும் விஜய் டிவியின் சீரியல் நடிகர், யார் தெரியுமா?

தீபக் குறித்த தகவல்:

இவர் சின்னத்திரை சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் தொகுப்பாளரும் ஆவார். இவர் சன், விஜய்,ராஜ் என பல சேனல்களில் ஒளிபரப்பாகி இருந்த தொடர்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் நிறைய ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார். கடைசியாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த 'தமிழும் சரஸ்வதியும்' என்ற சீரியல் ஹீரோவாக நடித்திருந்தார். இதற்கு பின் இவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. உண்மையிலேயே இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தலைப்புகள்
#big boss 8 contestants#big boss 8#பிக் பாஸ்#பிக் பாஸ் 8
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement