டைட்டில் வின்னர் கனவோடு இருந்தவரை வெளியேற்றிய பிக்பாஸ், எதிர்பாராத எலிமினேஷன்- யார் தெரியுமா?

0
37
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 97 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித், ஜெப்ரி, அன்ஷிதா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 8:

கடந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்கில் ராயன் தான் வெற்றி பெற்றார். பின் கடந்த 13 வது வாரத்திற்கான நாமினேசனில் ராணவ், மஞ்சரி வெளியேறி இருந்தார்கள். நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்குவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டி, சண்டை, சச்சரவு எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் எட்டு போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து ஏற்கனவே வெளியே போயிருந்த போட்டியாளர்களில் எட்டு பேர் உள்ளே வந்திருக்கிறார்கள்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இவர்கள் வந்தவுடன் பிக் பாஸ் வீடே ரணகளமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் போட்டியாளரும் தங்களுடைய கருத்துக்களை சொல்வதாக மற்ற போட்டியாளர்களை வைத்து செய்கிறார்கள். குறிப்பாக, விஷால்-சௌந்தர்யாவை உள்ளே வந்தவர்கள் கதறவிட்டதில் அவர்கள் அழுதே விட்டார்கள். அதோடு உள்ளே நுழைந்திருக்கும் எட்டு போட்டியாளர்களில் இரண்டு பேர் ஃபைனலிஸ்ட் ஆக வாய்ப்பு இருப்பதாக பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

வெளியேறிய நபர்:

இதனால் போட்டியாளர்களும் மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி இருப்பதால் யார் டைட்டில் வின்னர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கும் நபர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அருண் பிரசாத் தான் இந்த வாரம் வெளியேறி இருக்கிறார்.

அருண் குறித்த தகவல்:

இவருடைய எவிக்சன் பலருக்குமே அதிர்ச்சி தான். காரணம், இவர் இவர் டாப் 5ல் வருவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அருண். அதற்கு முன்பே இவர் சில படங்களிலும் நடித்திருந்தார். இருந்தாலும் இவர் சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனக்கு என்று ஒரு பிரபலத்தை
உருவாக்கி இருக்கிறார்.

Advertisement