பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் நான்காவது வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 27 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. பின் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மூன்றே நாளில் போட்டியாளர் நந்தினி திடீர் என்று வெளியேற்றப்பட்டிருந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நந்தினி வெளியேறினார்.
பிக் பாஸ் 9:
பின் முதல் வார எவிக்ஷனில் பிரவீன் காந்தி வெளியேறி இருந்தார். பின் இரண்டாவது வாரம் குறைவான வாக்குகளை பெற்று அப்சரா தான் வெளியேறி இருந்தார். பின் மூன்றாவது வாரம் நடந்த நாமினேஷனில் குறைவான வாக்குகள் பெற்று ஆதிரை வெளியேறி இருந்தார். மேலும், நான்காவது வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அதில், கம்ருதீன், பார்வதி, கானா வினோத் ,அரோரா, கலையரசன் ஆகியோர் பெயர் இடம் பெற்று இருக்கிறது.

வெளியேறும் நபர்:
இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்ற கம்ருதீன், கானா வினோத், அரோரா அதிகமாக வாக்குகள் பெற்று தப்பித்து விட்டார்கள். மீதி உள்ள கலையரசன், பார்வதி தான் டேஞ்சர்ஸ் ஜோனில் இருக்கிறார்கள். அதோடு இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெறுவதாக கூறப்பட்டது. அதனால் இருவருமே வெளியேறுவார்கள் என்று பேச்சு வார்த்தை வந்தது. ஆனால், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இந்த வாரம் கலையரசனை விட பார்வதி அதிகமாக வாக்குகள் பெற்று தப்பித்து விட்டார். கலையரசன் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு இந்த வாரம் வெளியேற இருக்கிறார்.

வைல்ட் கார்ட் என்ட்ரி:
அதோடு கடந்த வாரம் தான் அவர் ப்ரீ பாஸை வென்றிருந்தார். இவர் வெளியேறவில்லை என்றால் அடுத்த வாரம் நாமினேஷன் வந்திருக்க மாட்டார். ஆனால், இந்த வாரம் கலையரசன் எலிமினேட் ஆகி இருப்பதால் அவருடைய பீரி பாஸ் வேறு யாருக்காவது கொடுக்கப்படும். அது மட்டும் இல்லாமல் இந்த வாரம் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நான்கு போட்டியாளர்கள் நிகழ்ச்சிகள் சென்றிருக்கிறார்கள். சீரியல் நடிகை திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போகிறார்கள். இவர்கள் சென்ற பிறகு நிகழ்ச்சியின் ஆட்டம் சூடு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.






