பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் மூன்றாவது வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 20 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. பின் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மூன்றே நாளில் போட்டியாளர் நந்தினி திடீர் என்று வெளியேற்றப்பட்டிருந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நந்தினி வெளியேறினார்.
பிக் பாஸ் 9:
பின் முதல் வார எவிக்ஷனில் பிரவீன் காந்தி வெளியேறி இருந்தார். இதற்கிடையில் கேப்டன் டாஸ்க் நடைபெற்று இருந்தது. இதில் துஷார் தான் வெற்றி பெற்று வீட்டின் தலைவரானார். பின் பிக் பாஸ், இந்த சீசனில் டிசிபிலின் இல்லை என்று தல பதவியை பறித்தார். பின் நிகழ்ச்சியை சுவாரசியமாக்கும் வகையில் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இரண்டாவது வாரம் குறைவான வாக்குகளை பெற்று அப்சரா தான் வெளியேறி இருந்தார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:
இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மூன்று போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். இந்த வாரம்
வைல்ட் கார்ட் என்ட்ரி இருக்கும் என்று பிக் பாஸ் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இன்று வீக் எண்ட் எபிசோட் சூட் காலையிலேயே தொடங்கி விட்டது. அந்த வகையில் மூன்றாவது வாரம் நடந்த நாமினேஷனில் அரோரா, துஷார், ஆதிரை, கானா வினோத், ரம்யா ஜோ, அகோரி கலையரசன், பிரவீன், சுபிக்ஷா, வியனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

வெளியேறிய போட்டியாளர்:
இதில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் ஆதிரை தவிர எல்லோருமே இந்த வாரம் காப்பாற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த மூன்றாவது வார எவிக்சனில் ஆதிரை தான் வெளியேற இருக்கிறார். கடந்த சில தினங்களாகவே ஆதிரையினுடைய நடவடிக்கைகள் எதுவுமே சரியில்லை என்றும், குறிப்பாக எப்ஜேவிடம் அவர் நடந்து கொள்ளும் விதம் சுத்தமாக பிரிக்கவில்லை என்றெல்லாம் விமர்சித்து இருந்தார்கள். இவர் வெளியேறும் எபிசோடு நாளை ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






