விஜய் டிவியில் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி சமீபத்தில் தான் கோலாகலமாக முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருந்தார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வந்தார்.

மேலும், வைல்ட் கார்ட்டில் திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள். இதில் முதல் இடத்தை பிக் பாஸ் டைட்டில் பட்டத்தையும் திவ்யா கணேஷ் பெற்றிருக்கிறார்.
இரண்டாவது இடத்தை சபரி, மூன்றாவது இடத்தை விக்ரம், நான்காவது இடத்தை அரோரா பெற்றிருக்கிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 9 இன் டைட்டில் வின்னரும் சீரியல் நடிகையுமான திவ்யா கணேஷ் அளித்த பேட்டியில், என்னுடைய வெற்றிக்கு பிஆர் ஏஜென்சிகள் தான் காரணம் என்று விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் வந்திருக்கிறது.
பிக் பாஸ் 9:
நான் பிக் பாஸ் செல்வதற்கு முன்னால் சில காலம் வேலை இல்லாமல் தான் இருந்தேன். அப்படி இருக்கும்போது 30 லட்சம் ரூபாய் பிஆருக்கு செலவு செய்தேன் என்பது சொல்வதெல்லாம் வேடிக்கையான வதந்தி. எனக்கு கிடைத்த 50 லட்சம் ரூபாய் பரிசு தொகையை என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகப்பெரிய தொகை. இதில் வரி பிடித்தம் போக எனக்கு மீது எவ்வளவு வரும் என்று தெரியவில்லை. இவ்வளவு பெரிய தொகையை நான் எப்படி பீிஆருக்கு செலவிட முடியும்? நேர்மையாக இருப்பதற்காக நான் கொடுத்த விலை அதிகம்.

திவ்யா கணேஷ் பேட்டி:
நான் ரொம்பவே நேரடியாக பேசக்கூடியவள். அதற்காக நான் பல உறவுகளையும் வேலைகளையும் இழந்திருக்கிறேன். வீட்டிற்குள் எனக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று கூட சிலர் சொன்னார்கள்.
ஒருபோதும் நான் வளைந்து கொடுக்கவில்லை. நான் இப்படித்தான், பிடித்தால் இருங்கள் இல்லை என்றால் போங்கள் என்று உறுதியாக இருப்பேன். யார் என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு போகட்டும். நான் அமைதியாக சமைத்து சாப்பிடலாம் என்று கிச்சனிலேயே இருந்து விட்டேன்.
https://www.youtube.com/watch?v=DFnpYSK_iLg
நிகழ்ச்சி பற்றி சொன்னது:
அந்த வீட்டில் நடந்த சில கசப்பான அனுபவங்களை அங்கேயே விட்டுட்டு வந்து விட்டேன். இப்போது நான் முன்பை விட இன்னும் வலிமையாக பக்குவப்பட்டவளாக மாறியிருப்பதாக உணர்கிறேன். வாட்டர் மெலன் மீம்ஸ்களை என்னுடைய நண்பர்கள் அனுப்பி வைப்பார்கள். அதை பார்க்கும்போது நான் விழுந்து விழுந்து சிரிப்பேன். எனக்கு பின்னால் பேசியவர்களை பற்றி எனக்கு எப்போதுமே கவலை கிடையாது. ஒரு சராசரி பெண்ணாக ஒரு நேர்மையான ஒரு மனுசியாக மக்கள் என்னை ஏற்றுக் கொண்டது எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது என்று கூறியிருக்கிறார்.






