ரெவி வேறும் கேரக்டர் தான் – லவ் டுடே படத்தை வைத்து விமர்சித்தவருக்கு ஆஜீத் கொடுத்த பதில்

0
1958
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், இவர் முதலில் குறும்படம் தான் எடுத்து இருந்தார். அதன் பின் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் “கோமாளி” படம் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து இவர் லவ் டுடே படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் இளசுகள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், விமர்சன ரீதியாக லவ் டுடே படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புபெற்று இருந்தது. இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயினை தவிர அதிக பேமஸ் ஆனது மாமா குட்டி மற்றும் ரெவி கதாபாத்திரம் தான். இதில் ரெவி கதாபாத்திரத்தில் ஆஜீத் நடித்து இருந்தார்.

- Advertisement -

இவர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 3 -யில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றவர் இந்த சீசனில் இவர் பாடிய ரோஜா ரோஜா, போ நீ போ, உயிரே உயிரே போன்ற பாடல்கள் ரசிகர்களை கொள்ளை கொண்டது. மேலும், இந்த சீசனில் ஆஜீத் காலிக்கு Most Stylish Singer என்ற விருது கூட வழங்கப்பட்டது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் 2014 ஆம் ஆண்டு திக்கி தெணறது தேவதை (Thikki Thenarudhu Devatha) என்ற ஆல்பம் பாடலை பாடி இருந்தார்.

அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று. மேலும், அந்த வீடியோ யூடுயுபில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றது. சூப்பர் சிங்கரில் இவர் ஏ ஆர் ரஹ்மானிடம் தான் பட்டத்தை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. இதை தொடர்ந்து இவர் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துகொண்டார்.

-விளம்பரம்-

ஆனால், பிக் பாஸில் கூட இவர் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. இதனை தொடர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கேப்ரில்லாவுடன் இனைந்து நடனமாடி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் இரண்டாம் இடத்தை பெற்றார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தான் இவருக்கு லவ் டுடே படத்தில் வாய்ப்பும் கிடைத்தது. இந்த படத்தில் இவர் ரசிகர்கள் வெறுக்கும் வகையில் ஒரு நெகட்டிவ் ரோலில் நடித்து இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் லவ் டுடே படத்துக்கு பின் இவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும் வில்லன் லுக்கில் இருக்கிறது என்று ரசிகர் ஒருவர் கமண்ட் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த ஆஜீத் ‘நான் அப்படி பண்ணவில்லை. நான் ரெவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். அதற்கும் என் தனிப்பட்ட கேரக்டருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அந்த கோணத்தில் என் புகைப்படத்தை பாருங்கள். அப்போது நீங்கள் வில்லத்தனத்தை பார்க்க மாடீர்கள்’ என்று கூறியுள்ளார்.

Advertisement