கேப்ரில்லாவை தொடர்ந்து இந்த பிக் பாஸ் ஜோடி போட்டியாளருக்கும் கொரோனா. இன்னும் எத்தன பேருக்கு இருக்கோ.

0
837
gabe
- Advertisement -

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி மலையாள நடிகர் பிருத்விராஜ் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனுமான நடிகர் ராம்சரண் நடித்த ரகுள் பிரீட் சிங் நிக்கி கல்ராணி தமன்னா என்று பல்வேறு தளங்கள் கொரோனா தொட்டால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்கள்.

-விளம்பரம்-

அதே போல தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். சமீபத்தில் கூட கே வி ஆனந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் காலமானார். சமீபத்தில் காமெடி நடிகர் பாண்டு, ஆட்டோகிராப் கோமகன் ஆகியோர் கூட கொரோனாவால் காலமாகி இருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் பாருங்க : பல கோடி ரூபாய் மோசடி, கொலை மிரட்டல். கைது செய்யப்பட்ட வனிதாவின் உறவினர் ஹரி நாடார். (இவ்ளோ நகையா வச்சிருந்தாரு)

- Advertisement -

இப்படி சினிமா உலகை ஆட்டிப்படைத்தது வரும் கொரோனா தொற்று சின்னத்திரை பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான கேப்ரில்லா தற்போது கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘முரட்டு சிங்கிள்’ நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.

Another BB Jodigal contestant after Gaby tests positive for Covid 19; fans in shock ft Aajeedh

அதே போல் சமீபத்தில் விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார். இதில் இவருக்கு ஜோடியாக ஆஜித் நடனமாடி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இவருடன் நடனமாடிய ஆஜீத்துக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அவரே தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இதனால் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement