விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எண்ணற்ற பிரபலமான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சீசனில் எக்கச்சக்க விஜய் டிவி பிரபலங்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் சூப்பர் சிங்கர் புகழ் ஆஜித்தும் ஒருவர். திருச்சியை சேர்ந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 3 -யில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றவர் இந்த சீசனில் இவர் பாடிய ரோஜா ரோஜா, போ நீ போ, உயிரே உயிரே போன்ற பாடல்கள் ரசிகர்களை கொள்ளை கொண்டது. மேலும், இந்த சீசனில் ஆஜீத் காலிக்கு Most Stylish Singer என்ற விருது கூட வழங்கப்பட்டது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் 2014 ஆம் ஆண்டு திக்கி தெணறது தேவதை (Thikki Thenarudhu Devatha) என்ற ஆல்பம் பாடலை பாடி இருந்தார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று. மேலும், அந்த வீடியோ யூடுயுபில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றது. தற்போது சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் ஆஜித், விஸ்காம் படித்த வருகிறார்.
கொரோனா பிரச்சனை காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாததால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசனில் கலந்து கொண்டார் ஆஜித். ஒரு பாடகராக இருந்தும் இதுவரை தன்னது கல்லூரியின் எந்த நிகழ்ச்சியிலும் ஆஜித் பாடியது இல்லை என்பது ஆச்சிரியமே.மேலும், இவர் ஹிப் ஹாப் தமிழாவுடன் ஒரு பாடலில் வேலை செய்து இருக்கிறாராம். சூப்பர் சிங்கரில் இவர் ஏ ஆர் ரஹ்மானிடம் தான் பட்டத்தை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆஜீத் பேசுகையில், லாக்டவுனுக்கு முன் நான் சில ஆல்பம் பாடல்களை செய்து கொண்டு இருந்தேன். அதே போல ஹாட்ஸ்டாரில் ஒரு வெப் சீரிஸ்ஸில் கூட நடித்து வந்தேன். ஆனால், அது இரண்டும் லாக்டவுன் காரணமாக தற்காலிகமாக நின்றுவிட்டது என்று கூறியிருந்தார். இவரை பலரும் குட்டி பாபி சிம்ஹா என்று தான் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இவர் பாபி சிம்ஹா பேசிய வசனத்திற்க்கே டிக் டாக் செய்துள்ளார். அந்த வீடியோ இதோ.