ஆரவ் ஹீரோவாக நடிக்கும் “ராஜபீமா” படத்தின் கதை இதுதான்..! இயக்குனர் வெளியிட்ட தகவல்..!

0
54
Aarav
- Advertisement -

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அரவ் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ்.

Aarav

மேலும், “மீண்டும் வா அருகில் வா” என்ற திகில் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது புது முக இயக்குனர் சந்தோஷ் நரேஷ் இயக்கி வரும் “ராஜபீமா” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் நடிகர் ஆரவ்.

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆரவ். அதில் நடிகர் யானையுடன் இருப்பதால் இந்தபடம் “கும்கி” போன்ற ஒரு கதையம்சம் கொண்ட கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்து நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.

Raja beema

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இந்த படத்தை ஆரம்பித்த போதே இதை ஒரு சிறந்த திரைப்படமாக அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய மிக பெரிய பொறுப்பு என் தோளில் உள்ளது.

இந்த படத்தின் போஸ்ட்டரை பார்தததும் இது யானை மற்றும் பாகனுக்கு இடையேயான மற்றும் ஒரு கதை என்று நினைத்திருப்பீர்கள். அது உண்மை தான்.ஆனால், இந்த படத்தில் வியாபார நோக்கங்களுக்காக விலங்குகளை கொல்லும் கொடுமை குறித்து கூறியுள்ளோம்,அதை யானைக்கு மனிதனுக்கும் இருக்கும் ஒரு பந்ததத்தை கொண்ட ஒரு கதையையாக கமெர்ஷியல் பணியில் உருவாக்கயுள்ளோம் என்று ஆரவ் தெரிவித்துள்ளார்.

Advertisement