பிக்பாஸ் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் முதல் படம்.! வெளியான படத்தின் போஸ்டர்..!

0
319

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அரவ் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ்.

aarav

மேலும், “மீண்டும் வா அருகில் வா” என்ற திகில் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது புது முக இயக்குனர் சந்தோஷ் நரேஷ் இயக்கி வரும் “ராஜபீமா” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் நடிகர் ஆரவ்.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆரவ். இந்த படம் “கும்கி” போன்ற ஒரு கதையம்சம் கொண்ட கதையாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் மனிதனுக்கும் ஒரு யானைக்கும் இருக்கும் ஒரு பந்ததத்தை கொண்ட ஒரு கதையை கமெர்ஷியல் பணியில் உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

படத்தின் முதல் கட்ட படப்பிடிக்கு பாலக்காடு பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் பொள்ளாச்சியில் துவங்க இருக்கின்றனர். இன்னும் இந்த படத்தின் கதாநாயகி யார் என்று படக்குழு முடிவு செய்யவில்லை என்று தகவல்கள் கிடைத்துள்ளது.