கௌதம் மேனன் பட ஹீரோயினை திருமணம் செய்யப்போகும் பிக் பாஸ் ஆரவ்.

0
2498

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சீசன் ஆக இருந்து வருகிறது இந்த சீசனில் பங்குபெற்ற பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவில் நடிகர் நடிகைகளாக ஜொலித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ஆரவ்வும் ஒருவர். க் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அரவ் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான். மேலும், “மீண்டும் வா அருகில் வா” என்ற திகில் படத்திலும் நடித்து வருகிறார்.

- Advertisement -

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக வரும் எவருக்கும் சினிமாவில் நல்ல ஒரு எதிர்காலம் அமைந்துவிடுவதில்லை என்பதுதான் எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. இதில் ஆறும் ஒன்றும் விதிவிலக்கல்ல, பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் இவர் நடிப்பில் மார்க்கெட் ராஜா என்ற ஒரே ஒரு திரைப்படம் மட்டும்தான் வெளியானது. இப்படி ஒரு நிலையில் ஆரவ்விற்கு திருமண விரைவில் திருமணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆம், நடிகை ராஹி என்பவரை தான் ஆரவ் திருமணம் செய்துகொள்ள போகிறாராம். நடிகை ராஹி, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இமை போல் காக்க’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகர் ஆரவ் மற்றும் ராஹியின் திருமணம் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement