தடையற தக்க, தடம் இயக்குனர் மகிழ் திருமேனி படத்தில் வில்லனாக ஆரவ் – ஹீரோ யார் தெரியுமா ?

0
1379
aarav
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சீசன் ஆக இருந்து வருகிறது இந்த சீசனில் பங்குபெற்ற பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவில் நடிகர் நடிகைகளாக ஜொலித்து வருகிறார்கள்.அந்த வகையில் நடிகர் ஆரவ்வும் ஒருவர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ்.ஆரவ் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஓவியா இவர் மீது தீராத காதலில் இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நடிகை ராஹி என்பவரை தான் ஆரவ் திருமணம் செய்து கொண்டார்ஆரவ்.

-விளம்பரம்-
Udhayanidhi Stalin and Magizh Thirumeni New Movie Launch

நடிகை ராஹி, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இமை போல் காக்க’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகர் ஆரவ், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மார்க்கட் ராஜா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. அதே போல இவர் ராஜா பீமா என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் பிக் பாஸ் 3 வீட்டில் வெளியிடபட்டது.

- Advertisement -

ஆனால், அதற்கு பின்னர் இந்த படம் என்ன ஆனது என்பது தெரியவில்லை. இப்படி ஒரு நிலையில் நடிகர் ஆரவ், வில்லனாக களமிறங்க இருக்கிறார். தமிழில், தடையற தாக்க, தடம், மீகாமன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனி தற்போது இரண்டு வருட இடைவெளிக்கு பின்னர் உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.

உதயநிதி ஸ்டாலினுக்கு நாயகியாக நிதி அகர்வால் நடித்து வருகிறார். மேலும் ஆரவ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் உதயநிதிக்கு வில்லனாக ஆரவ் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நாயகனாக மட்டுமே நடித்து வந்தார் ஆரவ். இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடனேயே, வில்லனாக நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement