பிக் பாஸ் வீட்டில் இருந்த போது நடிகர் ஆரவ் தனது ஒரு வெளியில் ஒரு கேர்ள் பிரண்ட் இருக்கிறார் என்று சொன்னது இவங்க தான்.

0
782
aarav
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சீசன் ஆக இருந்து வருகிறது இந்த சீசனில் பங்குபெற்ற பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவில் நடிகர் நடிகைகளாக ஜொலித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ஆரவ்வும் ஒருவர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ்.

-விளம்பரம்-

ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான். மேலும், “மீண்டும் வா அருகில் வா” என்ற திகில் படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் ஆரவ், பிக் பாஸ் வீட்டில் இருந்த போது இவர் மீது நடிகை ஓவியா தீராத காதலில் இருந்தார். ஆனால், நடிகர் ஆரவ், ஓவியாவின் காதலை பட்டும் படமால் ஏற்று இருந்தார். அதனை சரி செய்ய ஆரவ் மருத்துவம் முத்தம் கூட கொடுத்து சரி செய்ய பார்த்தார். ஆனால், அப்போதும் ஓவியா, ஆரவ் மீது இருந்த காதலை விடாததால் பின்னர் இவர் இருவரும் நண்பர்களாக சுற்றி வந்தனர்.இப்படி ஒரு நிலையில் நடிகர் ஆரவ்விற்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருக்கிறியாது.

- Advertisement -

ஆம், நடிகை ராஹி என்பவரை தான் ஆரவ் திருமணம் செய்துகொள்ள போகிறாராம். நடிகை ராஹி, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இமை போல் காக்க’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகர் ஆரவ் மற்றும் ராஹியின் திருமணம் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், இதுவரை நடிகர் ஆரவ் இதுகுறித்து எந்த ஒரு தகவலையும் கூறாமல் இருந்தார். ஆரவ் திருமணம் குறித்து அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ளதாவது, ராஹே மற்றும் ஆரவ் குடும்பத்தினர் ஏற்கனவே தெரிந்தவர்கள் தான். இதன்மூலம் ராஹே மற்றும் ஆரவ் ரெண்டு பேரில் இடையே நட்பு உண்டானது. அதே நேரம் இரு வீட்டிலும் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க விரும்பினார்கள். இதனால் இரண்டு பேரிடமும் விருப்பத்தை கேட்டனர். இருவரும் சம்மதித்ததால் கல்யாணத் தேதியை முடிவு செய்தார்கள். பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த போது நடிகர் ஆரவ், எனக்கு ஒரு கேர்ள் பிரண்ட் இருக்கிறார் என்று சொன்னது ராஹேவைத்தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்

-விளம்பரம்-
Advertisement