‘தம்பி அஸ்வின், சினிமா என்பது’ – அஸ்வினின் 40 பட உருட்டுக்கு தனிப்பட்ட முறையில் ஆரி கொடுத்த அட்வைஸ்.

0
499
aswin
- Advertisement -

தன்னுடைய முதல் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் என்ன பேசுகிறோம் என்பதே பேச தெரியாமல் பேசி சர்ச்சையில் சிக்கி தவித்து வரும் அஸ்வின் பற்றி ப்ளூ சட்டை மாறன் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பெண் ரசிகைகள் மத்தியில் பிரபலமானார் அஸ்வின். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நடித்த ஒரு சில ஆல்பம் பாடல்கள் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. 10 ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று போராடி வந்த இவர்., தற்போது தான் ஹீரோவாகி இருக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-74-1024x516.jpg

அஸ்வினின் சர்ச்சை பேச்சு :

தற்போது இவர் ‘என்ன சொல்லப்போகிறாய்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அஸ்வின் பேசியது நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பேசிய அவர், னக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்குங்க. கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கிவிடுவேன் என்று இவர் பேசிய பேச்சால் இவரை நெட்டிசன்கள் கடந்த சில நாட்களாக வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : ‘வாய்யா சாமி’ பாட்ட கேட்ட அப்புறம் தான் முதல் முறையாக தியேட்டருக்கு கூட்டி போக சொன்னாங்க – ராஜலட்சுமி.

- Advertisement -

மன்னிப்பு கேட்ட அஸ்வின் :

ஆனால், இதுகுறித்து விளக்கமளித்த அஸ்வின், தன் முதல் படம் என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருந்ததாவும், யாரையும் குறை சொல்ல அப்படி பேசவில்லை என்றும் கூறி இருந்தார். அஸ்வினின் இந்த பேச்சை பல சினிமா பிரபலங்களும் விமர்சகர்களும் விமரித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக இதுகுறித்து வீடியோ விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அஸ்வின். இந்த விஷயம் என்னை மிகவும் பாதித்துவிட்டது நான் மிகவும் கஷ்டமாக இருக்கிறேன்.

நான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இல்லை என்றாலும் ஒரு கெட்ட எடுத்துக்காட்டாக இருந்துவிடக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அன்று என்னுடைய முதல் படம் என்பதால் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். அங்கு போய் நின்றதும் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிவிட்டேன். நான் பேசிய கருத்துக்கள் யாரையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று மிகவும் சோகத்துடன் தெரிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

அஸ்வின் பேச்சு குறித்து ஆரி :

அஸ்வினின் இந்த பேச்சை இயக்குனர் பேரரசு, தயாரிப்பாளர் ராஜன் என்று பல பிரபலங்கள் கலாய்த்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் அஸ்வினின் பேச்சு குறித்து பேசியுள்ள பிக் பாஸ் வெற்றியாளரும் நடிகருமான ஆரி, ஒரு டைரக்டர் இல்லாமல் நடிகர் இல்லை ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னர் நிறைய பேர் இருக்கிறார்கள். இது அவருக்கும் தெரியும் ஆனால், எதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் அப்படி பேசிவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டார்.

அஸ்வினுக்கு ஆரி அறிவுரை :

அவரே மன்னிப்பு கேட்டதுக்கு அப்புறம் அதை மறந்துவிட்டு போய்விடலாம். ஆரம்பத்தில் சரியான வழிகாட்டுதல்கள் இல்லை என்றால் இப்படி சின்னச் சின்ன தவறுகள் நடப்பது இயல்பு தான். ஆனால், செய்த தவறை திரும்பச் செய்யாமல் அதிலிருந்து தீர்த்துக் கொள்வது தான் நல்லது. இந்த தவறிலிருந்து பாடம் கற்றிருப்பார் என்று நம்புகிறேன். அஸ்வின் சினிமா எப்போதும் அப்படித்தான் நல்லது செய்தால் தூக்கி வைத்து விடும் ஏதாவது சரியாக இல்லை என்றால் புரட்டிப் போட்டுவிடும். இந்த பாடம் உங்களை ஒரு நல்ல பேச்சாளராகவும் நடிகராகவும் மாற்றும் என்று நம்புகிறேன் என்று பேசியிருக்கிறார்.

Advertisement