விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 12 வாரங்கள் நிறைவுசெய்து 13வது வாரத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ஆரியும் ஒருவர். நெடுஞ்சாலை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட ஆரி அதன்பின்னர் நடித்த படங்கள் அவ்வளவாக கவனிக்கப்படவில்லை. இருப்பினும் இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். தற்போது இவர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.
ஆரம்பம் முதலே ஆரிக்கு பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட போட்டியாளர்களில் விரோதம் தான் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் ஆரி எப்போதும் அறிவுரை செய்து கொண்டே இருக்கிறார். மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் என்று மற்ற போட்டியாளர்களை அனைவருமே இவருக்கு முத்திரை குத்தினார்கள். ஆனால், நாட்கள் செல்ல செல்லஆரிக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. மேலும், இந்த சீசனில் அதிக முறை நாமினேட் செய்யப்பட்ட ஆண் போட்டியாளர்களில் ஆரி இதன் முதல் ஆளாக இருந்து வருகிறார். இருப்பினும் இவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவால் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் ஆரி நடித்துள்ள பகவான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி இருந்தது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிக்பாஸ் வீட்டில் அனைத்து போட்டியாளர்கள் முன்பும் வெளியிடப்பட்டிருந்தது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான ஒரு சில தினங்களிலேயே ஆரியின் அடுத்த படமான ‘அலேகா’ படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் ஆரிக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார்.
இப்படி ஒரு நிலையில் இன்று புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லரின் இறுதியில் நாசர், ஆரி என் பெயரை கேட்கிறார். அதற்கு விஜய், ஜோசப் விஜய் என்று கூறுகிறார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் இளையதளபதி விஜயின் உண்மையான பெயர் ஜோசப் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்தப் படத்தில் நடிகர் ஆரி, விஜய்யின் உண்மையான பெயரில் நடிக்கிறாரா ? இல்லை படத்தின் ஒரு காட்சியில் மட்டும் எப்படி பெயர் இடம் பெற்று இருக்கிறதா என்பது தெரியவில்லை.