ஆரி பாலா விவகாரம் – குறும்படம் போட்டு பாலாவை வச்சி செய்யும் ரசிகர்கள்.

0
2526
aari

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 13 வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. இதுவரை இந்த சீசனில் 10 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் இன்னும் 8 பேர் உள்ளே இருக்கின்றனர். இன்னும் ஒரு இரண்டு வாரத்தில் இந்த சீசனே நிறைவடைய இருக்கும் நிலையில் இந்த சீசனில் வெற்றிய பெற போட்டியாளர்கள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர். அதிலும் பாலா தான் வெற்றி பெறுவதை விட ஆரி வெற்றி பெற கூடாது என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.இந்த சீசன் கொஞ்சம் சுவாரசியமான சென்றத்துக்கும் முக்கிய காரணம் ஆரி மற்றும் பாலாஜியின் சண்டைகள் தான் என்பது மறுக்க முடியாத ஒன்று.

ஆனால், கடந்த சில தினங்களாக இவர்கள் இருவரும் பழசை எல்லாம் மறந்து ஏதோ அண்ணன் தம்பி போல மிகவும் பாசமாக பழகி வருகின்றனர். ஆனால், அவ்வப்போது ஆரியை பற்றி பாலாஜி மற்றவர்களிடம் புறம் பேசிக்கொண்டு தான் வருகிறார். ஆரம்பத்தில் ஆக்ரோஷ மனிதராக இருந்த பாலா, கடந்த சில வாரங்களாக அமைதியாக மாறிவிட்டார். ஆனால், நேற்றய நிகழ்ச்சியில் மீண்டும் பாலா தனது பழைய ஆக்ரோஷ குணத்தை ஆரியிடம் வெளிப்படுத்தினார். வாரம் முழுவதும் சுவாரஸ்யம் குறைவாக இருந்த இருவரை நாமினேட் செய்யுமாறு பிக்பாஸ் கூற, ஆரி எழுந்து பாலாஜி பெயரை சொன்னார்.

- Advertisement -

அவர் அதற்கான காரணங்களை சொல்லும்போதே பாலாஜி இடையில் பேச, அங்கேயே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு விட்டது. பின்னர் இருவரும் சுவாரசியம் குறைவான போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் இருவரும் கண்ணாடி அறைக்குள் அனுப்பப்பட்டனர். கண்ணாடி அறைக்கு சென்ற பின்னர் இடையில் வாக்குவாதம் நிகழ, ஆரி ஒரு கட்டத்தில் பாலாஜியை சோம்பேறி என்று கூற டென்சன் ஆன பாலாஜி கத்தி கூப்பாடு போட்டார். இன்னும் ஒரு முறை என்னை சோம்பேறி என்று சொன்ன அவ்ளோ தான் நீ என்று ஆரியை எச்சரித்த பாலாஜி முருகதாஸ் கண்டபடி ஆரியை திட்டித்தீர்த்து மைக்கையும் கழட்டி உடைத்து விட்டார்.

ஒரு கட்டத்தில் ஆரி, தான் ‘சோம்பேரி’ என்று சொன்னதை வாப்பஸ் வாங்கி கொள்கிறேன், அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார். ஆனால், கண்ணாடி அறைக்குள் இருந்து வெளியே வந்த பின்னரும் பாலா – ஆரி இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது என்னை சோம்பேறி என்று சொன்னதுக்கு ஒழுங்கு மரியாதையா மன்னிப்பு கேட்ருங்க, இல்லனா வேற மாதிரி ஆகிடும் என்று சொன்னார் பாலா. அதற்கு ஆரி,நான் உள்ளே மன்னிப்பு கேக்கலையா என்று கேட்டதற்கு, நீங்க உள்ளே வாபஸ் வாங்கிக்கிறேன்னு தான் சொன்னீங்க மன்னிப்பு கேக்கல என்று கூறினார். இந்த நிலையில் ஆரி, மன்னிப்பு கேட்டதற்கான குறும்படம் ஒன்றை நெட்டிசன்கள் போட்டுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement