சம்யுக்தாவின் தாய்மை குறித்து பேசினாரா ஆரி ? இந்த குறும்படத்தை நீங்களே பாருங்க. அவர் சொன்னது இதான்.

0
24123
aari
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஏழு வாரத்தை நிறைவு கிட்டத்தட்ட பாதி சீசனை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று பேர் வெளியேறிய நிலையில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தனர். நேற்றய நிகழ்ச்சியில் சம்யுக்தா சொன்ன ‘கலீஜ்’ மற்றும் ‘வளர்ப்பு ‘ என்ற சொல் தான் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதனால் சம்யுக்தாவிற்கு எதிராக ட்விட்டரில் ஹேஷ் டேக் கூட ட்ரெண்டிங்கில் வந்ததது. இப்படி ஒரு நிலையில் சம்யுக்தாவிற்கு எதிராக நெட்டிசன்கள் குறும்படம் ஒன்றை போட்டுள்ளார்கள்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் சம்யுக்தா கொஞ்சம் நடுநிலையாக தான் இருந்த வந்தார். ஆனால், நாட்கள் செல்ல செல்ல இவர் பாலாஜி டீமில் இணைந்து விட்டார். அதிலும் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி ‘தருதல’ பஞ்சாயத்தில் பாலாஜிக்கு ஆதரவாகத்தான் சம்யுக்தா பேசியிருந்தார். பாலாஜிக்கு யாரெல்லாம் பிடிக்காது அவரை சமைப்பதற்கும் பிடிக்காது என்பதை வெளிப்படையாகவே காட்டி வருகிறார்.சனம் ஷெட்டி மட்டும் பாலாஜி பிரச்சினை ஏற்பட்ட பின்னர் சம்யுக்தா சனம் ஷெட்டியிடம் அடிக்கடி ஏதாவது ஒரு சண்டையை போட்டு வருகிறார்.இப்படி ஒரு நிலையில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது.

- Advertisement -

அதில் கால் சென்டரில் மற்ற போட்டியாளர்கள் தங்களுக்குத் தோன்றும் கேள்விகளை கேட்டுவந்தனர். அந்த வகையில் நேற்று வெளியான ப்ரோமோ ஒன்றில் சம்யுக்தாவிற்கு சனம் ஷெட்டி கால் செய்துபேசி இருந்தார். அப்போது சம்யுக்தா நீங்கள் பார்ப்பதற்கு தான் அழகாக இருக்கிறீர்கள் ஆனால் வாயை திறந்தாலே கலீஜ் என்று கூறி இருந்தார். அதே போல மத்தவங்களுக்கு நான் கேப்டன் ஆனது அவ்வளவு வெறுப்பு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை என்று கூறிய சம்யுக்தா, அதற்கு என்ன காரணம் என்று சனம் கேட்டதற்கு அது அவங்களோட வளர்ப்பு என்று கூறி இருந்தார். இந்த விஷயம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவ #Samyuktha ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் வந்தது அதில் பலரும் சம்யுக்தாவிற்கு எதிராக ட்வீட்களை பகிர்ந்து வந்தனர்.

இந்த விஷயம் தான் தற்போது சம்யுக்தாவிற்கு எதிராக திரும்பி உள்ளது. அதே போல நேற்றய நிகழ்ச்சியில் ஆரி ‘வளர்ப்பு’ பற்றி ஏன் பேசுறீங்க என்று கேட்ட போது, நீங்கள் ஏன் என் தாய்மையை பற்றி பேசினீர்கள் என்று வாக்கு வாதம் செய்தார். ஆனால், உண்மையில் ஆரி, அப்படி சொல்லவே இல்லை.அவர் சொன்னது சின்ன வயசா இருக்க ஆஜித்திற்கு அத்தனை மெச்சூரிட்டி தேவைப்படும் என்று நினைக்கும் நீங்கள் ஒரு குழந்தைக்கு தாயாகி அவர்களின் மெச்சூரிட்டி அளவில் அப்படி இருக்கும்போது ஒரு கடமையை செய்ய தவறியதை சுட்டிக்காட்டிய பிறகு என்னை குறை சொல்லிவிட்டார் என்று கூறியுள்ளார் ஆரி.

-விளம்பரம்-
Advertisement