ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அவர் பண்ண விஷ்யத்த பாத்து ச்சீனு ஆகிடிச்சி. ஆரி குறித்து முன்னாள் போட்டியாளர்.

0
93819
aari
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி வளர்ந்து வருபவர் நடிகர் ஆரி. இவர் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான ‘ரெட்டைசுழி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நடிகராக அறிமுகமானர். இதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு கிருஷ்ணா இயக்கத்தில் நெடுஞ்சாலை என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் தான் நடிகர் ஆரி மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இதனைத் தொடர்ந்து மாலை பொழுதின் மயக்கத்திலே, மாயா, உன்னோடு கா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

ஆரம்பம் முதலே ஆரிக்கு பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட போட்டியாளர்களில் விரோதம் தான் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் ஆரி எப்போதும் அறிவுரை செய்து கொண்டே இருக்கிறார். மேலும், மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் என்று மற்ற போட்டியாளர்களை அனைவருமே இவருக்கு முத்திரை குத்தினார்கள். ஆனால், நாட்கள் செல்ல செல்லஆரிக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. மேலும், இந்த சீசனில் அதிக முறை நாமினேட் செய்யப்பட்ட ஆண் போட்டியாளர்களில் ஆரி இதன் முதல் ஆளாக இருந்து வருகிறார். இருப்பினும் இவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவால் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகிறார்.

- Advertisement -

நடிகர் ஆரி அவர்கள் சினிமா தவிர சென்னை வெள்ளம்,ஜல்லிக்கட்டு பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை போன்ற அனைத்து சமுதாய பிரச்சனைக்கும் முன்னின்று குரல் கொடுத்தவர்.அதுமட்டும் இல்லாமல் இவர் கடந்த சில ஆண்டுகளாக மாறுவோம் மாற்றுவோம் என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி வருகிறார். அந்த அறக்கட்டளையில் விவசாயம் குறித்த விழிப்புணர்வுகளை மேற் கொண்டு வருகிறார் ஆரி. இதற்காக நடிகர் ஆரி அவர்கள் கின்னஸ் புத்தகத்தில் கூட இடம் பிடித்தார்.

வீடியோவில் 17 : 38 நிமிடத்தில் பார்க்கவும்

நடிகர் ஆரி ஜல்லிகட்டு போராட்டத்தின் போது செய்த செயல் குறித்து நடிகர் டேனியல் குறிப்பிட்டுள்ளார். நடிகர் டேனியும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பல உதவிகளை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பேட்டியில் பேசியுள்ள டேனியல், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அவருடன் நான் ஏழு நாள் பட இருந்தேன் அப்போது அவர் என்னிடம் யார் வந்து அழைத்தாலும் யாரும் மீடியா பக்கம் போகாதீர்கள் அவர்கள் நம்மிடம் தேவையில்லாமல் வார்த்தைகளை பிடுங்குவார்கள் என்று சொன்னார் இதனால் நானும் மீடியாவிடம் பேசவில்லை.

-விளம்பரம்-

என்னை இப்படி சொல்லிவிட்டு அவர் ஒருபுறம் கையில் பத்து மைக்கை பிடித்து கொண்டு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார். இதனால் நம்மளை தட்டிவிட்டு அவர் ஏதாவது பெயர் எடுக்க பார்க்கிறாரா, ச்சீ, என்னடா இப்படி பண்ணி விட்டார் என்று யோசித்தேன். அதன் பின்னர் அவரிடம் , எங்களை மீடியாவிடம் பேச வேண்டாம் என்று கூறிவிட்டு நீங்கள் பேசி விட்டீர்களே என்று சொன்னதற்கு, யாராவது ஒருவர் வழிநடத்திச் செல்ல வேண்டும் இல்லையா என்று சொன்னார், அவர் சொன்ன காரணம் எனக்கு ஏற்றுக்கொள்ளும்படி என்பதால் இந்த விஷயத்தை நான் அப்படியே விட்டு விட்டேன் என்று கூறியுள்ளார்.

Advertisement