இன்று நடைபெற்று வரும் இந்தியா – ஆஸ்திரேலியா போட்டிக்கு இடையே மைதானத்தில் மாஸ் காட்டியுள்ள ஆரி ரசிகர்கள்.

0
12566
aari
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் ஆரியும் ஒருவர், நெடுஞ்சாலை திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆரி, அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கவில்லை. இறுதியாக நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

-விளம்பரம்-

ஆரம்பம் முதலே ஆரிக்கு பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட போட்டியாளர்களில் விரோதம் தான் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் ஆரி எப்போதும் அறிவுரை செய்து கொண்டே இருக்கிறார். மேலும், மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் என்று மற்ற போட்டியாளர்களை அனைவருமே இவருக்கு முத்திரை குத்தினார்கள். ஆனால், நாட்கள் செல்ல செல்லஆரிக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. மேலும், இந்த சீசனில் அதிக முறை நாமினேட் செய்யப்பட்ட ஆண் போட்டியாளர்களில் ஆரி இதன் முதல் ஆளாக இருந்து வருகிறார். இருப்பினும் இவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவால் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகிறார்.

- Advertisement -

அதிலும் கடந்த சில வாரங்களாக இவருக்கும் பாலாவிற்கும் ஏற்பட்டு வரும் கடுமையான வாக்குவாதங்களில் பாலாஜி கண்ட மேனிக்கு தரம் தாழ்ந்து பேசினாலும் ஆரி கண்ணியம் தவறாமல் பொறுமையை காத்து வருவது பலரையும் கவனத்தையும் ஆரியின் பக்கம் திருப்பியது. அதுமட்டுமல்லாமல் ஆரி தான் இந்த சீசன் டைட்டிலை நிச்சயம் வெல்வார் என்று பலரும் ஆணித்ததனமாக நம்பி வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல நேற்று சோம் சேகருக்கு பின்னர் இரண்டாம் பைனலிஸ்ட்டாகவும் வந்தார் ஆரி.

ஆரிக்கு சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதனாலேயே இவரது பெயர் பல முறை ட்விட்டரில் கூட ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. இப்படி ஒரு நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆரி பெயரை பதாகையை ஏந்திய ரசிகர்கள் சிலர், ஆரி தான் டைட்டில் வின்னர் என்று குறிப்பிட்டு ஆரிக்கு தங்களது ஆதரவை தெரிவித்து உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement