அடுத்தவங்க உழைப்புல பெருமை தேடிக்கிறீங்க, என்ன மனுஷன் நீங்க – நேற்று ஆரி செய்த செயலால் கடுப்பான ரசிகர்கள்.

0
5257
aari

ஆரம்பம் முதலே ஆரிக்கு பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட போட்டியாளர்களில் விரோதம் தான் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் ஆரி எப்போதும் அறிவுரை செய்து கொண்டே இருக்கிறார். மேலும், மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் என்று மற்ற போட்டியாளர்களை அனைவருமே இவருக்கு முத்திரை குத்தினார்கள். ஆனால், நாட்கள் செல்ல செல்லஆரிக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. மேலும், இந்த சீசனில் அதிக முறை நாமினேட் செய்யப்பட்ட ஆண் போட்டியாளர்களில் ஆரி இதன் முதல் ஆளாக இருந்து வருகிறார். இருப்பினும் இவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவால் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகிறார்.

அதிலும் கடந்த சில வாரங்களாக இவருக்கும் பாலாவிற்கும் ஏற்பட்டு வரும் கடுமையான வாக்குவாதங்களில் பாலாஜி கண்ட மேனிக்கு தரம் தாழ்ந்து பேசினாலும் ஆரி கண்ணியம் தவறாமல் பொறுமையை காத்து வருவது பலரையும் கவனத்தையும் ஆரியின் பக்கம் திருப்பியது. பாலாஜிக்கு அடுத்தபடியாக ரம்யா தான் ஆரியின் விரோதத்தை தொடர்ந்து சம்பாதித்து வருகிறார். இதனாலேயே ரம்யாவை ஆரியின் ரசிகர்கள் தொடர்ந்து திட்டி தீர்த்து வருகின்றனர்.

- Advertisement -

அவ்வளவு ஏன் கடந்த வாரம், கமல் பேசிய போது ரம்யா, பாலாஜியை பேசவிட்டுவிட்டு பின்னர் ஆரி பேசும் போது சரி போங்க என்று சொல்லி பாலாஜியை அழைத்து சென்றுவிடுகிறார் என்று ரம்யா பாண்டியனை ஒருதலைபட்சவாதியாக சுட்டிக்காட்டினார் கமல். இப்படி ஒரு நிலையில் ரம்யா பாண்டியன் பெற்ற பாராட்டை ஆரி தனக்காக திருடிக்கொண்டுவிட்டதாக சமூக வலைதளத்தில் ஆரிக்கு எதிராக குறும்படம் ஒன்றை போடுள்ளனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வரும் போது ஆளுக்கொரு செடி கொடுக்கப்பட்டது.

அதற்கு பிறகு, அந்த செடி என்ன ஆச்சுன்னே காட்டல. வீட்டை விட்டு வெளியேறும் பிரபலங்களும், செடியை பராமரிக்க இன்னொரு நபரை நியமிக்க வேண்டும். ஆனால், அதையும் செய்யவில்லை. இதை பற்றி கடந்த நவம்பர் 15 ஆம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கமல் கேட்ட போது., அதில் பெரும்பாலோனோர் யாரும் செடிகளை கவனிக்கவில்லை என்று தெரிந்தது. அவ்வளவு ஏன் விதை நெல்லை சேகரித்து கின்னஸ் சாதனை எல்லாம் வாங்கிய ஆரி அர்ஜுனா கூட பிக் பாஸ் வீட்டில் செடிகளை பராமரிக்காமல் பட்டுப் போக செய்து விட்டார்.

-விளம்பரம்-

ஆனால், தனக்கு கொடுக்கப்பட்ட செடிகளை மட்டுமின்றி, பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் கவனிக்காத செடிகளையும், தன் குழந்தைகளாகவே நினைத்து வளர்த்து வருவதாக ரம்யா கூறியதற்கு கமல் கூட பாராட்டினார். கமல் சாரிடம் தன்னுடய செடி பட்டுப்போய்விட்டதாக சொன்ன ஆரி, நேற்றய நிகழ்ச்சியில் ஒரு செடியில் ரோஜா பூத்திருக்கிறது. அனைவரையும் செடிக்கு தண்ணீர் ஊற்ற வைத்திருக்கிறேன் என்று கூறி இருந்தார். இந்த வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் பலரும் ஆரி கேமரா முன் நாடகம் ஆடுகிறார் என்று கூறியதோடு. ரம்யாவிற்கு கிடைத்த பாராட்டை தனக்கு சொந்தமானது போல அபகரிக்கபார்க்கிறார் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement