பிக் பாஸ் 5 பைனலுக்கு கூப்பிடல இப்போ அழைப்பு விடுத்தும் வராத ஆரி – அவர் சொன்ன காரணத்தை கேட்டு திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.

0
542
aari
- Advertisement -

ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது. 16 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 12 பேர் வெளியேற்றப்பட்டு 4 பேர் மட்டும் இறுதி போட்டியில் இருந்தனர். கடந்த வாரம் இறுதி நாமினேஷன் என்பதால் அனைவரும் நாமினேட் ஆகி இருந்தார்கள். இதில் பல தனியார் சமூக வலைதள பக்கத்தில் நடைபெற்று வந்த வாக்கெடுப்புகளில் அபிராமிக்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகி இருந்தது. இதனால் அவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அனைவரும் இறுதி வாரத்திற்கு தகுதி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் அபிராமி திடீரென்று வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

இதனால் பாலாஜி, ஜூலி, ரம்யா பாண்டியன், நிரூப், தாமரை ஆகிய 5 பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுஇருந்தனர். இப்படி ஒரு நிலையில் ஜூலியும் திடீரென்று வெளியேற்றப்பட்டார். இதன் மூலம் பாலாஜி, நிரூப், தாமரை, ரம்யா ஆகிய 4 பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர். இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார் என்று மிகுந்து எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் பாலாஜி முருகதாஸ் பட்டத்தை வென்று இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் பைனல்ஸ் :

இந்த சீசனில் இரண்டாம் இடத்தை நிரூப்பும் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை ரம்யா மற்றும் தாமரையும் பிடித்துள்ளனர். பிக் பாஸ் அல்டிமேட் பைனலில் பல்வேறு முன்னாள் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். ஆனால், பிக் பாஸ் 4 வெற்றியாளரான ஆரி கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், எனக்கு படப்பிடிப்பு இருப்பதால் என்னால் பிக் பாஸ் அல்டிமேட் இறுதி போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை, என்னை மன்னித்து விடுங்கள்.

அழைத்தும் வராத ஆரி :

அனைத்து பைனலிஸ்ட் போட்டியாளருக்கும் என் வாழ்த்துக்கள். உங்கள் குரலை நான் மிஸ் செய்வேன் பிக் பாஸ். என்னை அழைத்த விஜய் டிவிக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் 5 பைனலுக்கு கூட ஆரி வரவில்லை. இதுகுறித்து பதிவிட்ட அவர், பிக் பாஸ் 5வின் கோப்பை அளிக்கும் நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வேன் என்று நீங்கள் எதிர்பார்த்துகொண்டு இருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is e34498e4-3f90-49d8-a602-287128a495a6.jpg

பிக் பாஸ் 5க்கு அழைக்கப்படவில்லை :

நானும் உங்களையும் கமல் சாரையும் மீண்டும் சந்திக்க ஆவலாக இருந்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை என்று பதிவிட்டுள்ளார். ஆரியின் இந்த பதிவை தொடர்ந்து ட்விட்டரில் #Aari ட்ரெண்டிங்கில் வந்து உள்ளது. ஆரியை போல கடந்த சீசனில் இரண்டாம் இடத்தை பிடித்த பாலாஜியும் பிக் பாஸ் இறுதி போட்டிக்கு அழைக்கப்படவில்லை என்று பதிவிட்டு இருந்தார்.

திட்டி தீர்க்கும் பாலாஜி ரசிகர்கள் :

ஆனால், இந்த முறை அழைப்பு வந்தும் ஆரி பிக் பாஸ் பைனலுக்கு போகவில்லை. இதை பார்த்த பாலாஜியின் ரசிகர்கள் பலரும் ஆரியை திட்டி தீர்த்து வருகின்றனர். இதற்க்கு முக்கிய காரணமே இந்த சீசனில் பாலாஜி தான் டைட்டிலை வென்று இருக்கிறார். அதனால் தான் ஆரி, அழைப்பு விடுத்தும் வரவில்லை என்று கூறி வருகின்றனர்.

Advertisement