பிக் பாஸுக்கு பின் அந்த பிரச்சனை சர்ஜரி செய்யும் அளவுக்கு மோசமாகிடிச்சி – ஆரி சொன்ன ஷாக்கிங் தகவல்.

0
6166
aari
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஆரி அர்ஜுனாவும் ஒருவர் ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் வெளிவந்த ரெட்டைசுழி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் நெடுஞ்சாலை, மாயா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பின் ஆரி அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானர்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னரும் ஆரியே ஆவார். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் சேர்ந்து உள்ளது. தற்போது ஆரி படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஆரி அவர்கள் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தனக்கு ஏற்பட்ட சர்ஜரி குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியிருப்பது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளி வந்த பிறகு எனக்கு சோல்டரில் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்தது.

- Advertisement -

பல மருத்துவர்களிடம் நான் அணுகினேன். பிறகு சர்ஜரி பண்ணும் அளவிற்கு என்னுடைய தோல் பாதிக்கப்பட்டு இருந்தது. பிறகு என்னுடைய நண்பர் ஒருவர் திருவண்ணாமலையில் இருக்கும் மருத்துவரிடம் சென்று ஒரு முறை பாருங்கள். இதை முயற்சி செய்யுங்கள் என்று சொன்னார். நானும் அவர் சொன்ன மாதிரி அந்த டாக்டரை சந்தித்து மருத்துவம் செய்து கொண்டேன். ஒரு மாதத்திலேயே என்னுடைய பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிட்டது. நிஜமாகவே உலகில் மருத்துவம் எல்லா இடத்திலும் இருக்கிறது.

அதை நாம் சரியான நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்தினால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. தற்போது நாங்கள் சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்காக மருத்துவ முகாம் செய்ய இருக்கிறோம். நடிகர் சங்கம் நடிகர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தி விட்டு பிறகு தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் என அனைவருக்கும் இந்த மருத்துவத்தைப் பற்றி மருத்துவ முகாம் நடத்த இருக்கிறார்கள் என்று பல சுவாரசியமான விஷயங்களை என்று பகிர்ந்து கொண்டார்.

-விளம்பரம்-
Advertisement