ஒரு வருடமாக படுத்த படுக்கையாக இருந்துள்ள ஆரி – பிக் பாஸ் வீட்டில் செய்த வேலை. குவியும் பாராட்டுக்கள்.

0
13031
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி வளர்ந்து வருபவர் நடிகர் ஆரி. இவர் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான ‘ரெட்டைசுழி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நடிகராக அறிமுகமானர். இதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு கிருஷ்ணா இயக்கத்தில் நெடுஞ்சாலை என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் தான் நடிகர் ஆரி மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இதனைத் தொடர்ந்து மாலை பொழுதின் மயக்கத்திலே, மாயா, உன்னோடு கா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். நடிகர் ஆரி அவர்கள் சினிமா தவிர சென்னை வெள்ளம்,ஜல்லிக்கட்டு பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை போன்ற அனைத்து சமுதாய பிரச்சனைக்கும் முன்னின்று குரல் கொடுத்தவர்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இவர் கடந்த சில ஆண்டுகளாக மாறுவோம் மாற்றுவோம் என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி வருகிறார். அந்த அறக்கட்டளையில் விவசாயம் குறித்த விழிப்புணர்வுகளை மேற் கொண்டு வருகிறார் ஆரி. இதற்காக நடிகர் ஆரி அவர்கள் கின்னஸ் புத்தகத்தில் கூட இடம் பிடித்தார். பிக் பாஸில் கடந்து வந்த பாதை டாஸ்கின் போது ஆரி பேசிய போது, தனது வீட்டில் அனைவருமே படித்து ஓரளவிற்கு செட்டில் ஆகி விட்டார்கள் ஆனால் நான்தான் படிப்பு வராமல் அப்படியே சுற்றிக்கொண்டு கொண்டு இருந்தேன் அப்போது எனது தந்தை எனது சிறு பகுதியை விற்று ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து என்னை சென்னைக்கு வழி அனுப்பி வைத்தார்.

- Advertisement -

அதன் பின்னர் சென்னையில் ஒரு மஞ்சப் பையோடு வந்து இறங்கிய நான் பின்னர் சினிமாவில் எப்படியோ வாய்ப்பைத் தேடி அலைந்து கொண்டிருந்த சமயத்தில் சேரன் மூலமாக எனக்கு பட வாய்ப்பு வந்திருந்தது அந்த படத்தின் பெயர் ‘ஆடும் கூத்து’ அந்த படம் சிறந்த தமிழ் மொழிக்கான தேசிய விருதை பெற்றது. ஆனால் அந்த படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. என்னுடைய முதல் படமே திரையரங்கில் வெளி வராமல் போனது மிகவும் வருத்தமான விஷயம் என்று கூறியிருந்தார் ஆரி. இத்தனை வலிகளை கடந்து வந்த ஆரி பற்றி அறியாத ஒரு விஷயமும் இருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் கேப்டன் பதவிக்கான டாஸ்க் ஒன்று நடைபெற்றது. அதில் ரியோவை பாலாஜியும், கேப்ரில்லாவை சுரேஷும் தூக்கி கொண்டு நின்றனர்.

அந்த டாஸ்கில் வேல்முருகனை தனது தோளில் சுமந்து கொன்று நின்றார் ஆரி. ஆனால் ஆரிக்கு முட்டியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறதாம். இதனால் ஆறு மாத காலம் படுக்கையில் படுத்த படுக்கையாக இருந்தாராம். அதே போல ஒரு வருடம் நடக்க முடியாமல் இருந்தாராம். இருப்பினும் அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு ஒரு மணி நேரம் வேல்முருகனை சுமந்து நின்றிருக்கிறார் ஆரி இதனை ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்

-விளம்பரம்-
Advertisement