விஜய் டிவி பிரபலங்கள் பலரும் ரியோக்கு ஆதரவு தெரிவிக்க, ஆரிக்கு ஆதரவு தெரிவித்த முதல் விஜய் டிவி தொகுப்பாளர் – காரணம் இதான்.

0
15186
aari
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் ரியோ, கேப்ரில்லா, நிஷா, ரம்யா, ரேகா, ஆஜீத், ஷிவானி என்று பல்வேறு விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டனர் (ரம்யா, ரேகா இருவரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் விஜய் டிவி reference பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது). இதனால் விஜய் டிவி பிரபலங்களை மட்டும் தொடர்ந்து காப்பற்றி வருவதாக ரசிகர்கள் பலரும் குறை கூறி வந்தனர். அதிலும் குறிப்பாக ஷிவானி, ஆஜீத் எல்லாம் எப்போதோ வெளியில் செல்ல வேண்டிய நபர்கள். ஆனால், அவர்கள் எல்லாம் 90 நாட்களுக்கு மேல் பிக் பாஸில் தப்பித்து வந்தனர்.

-விளம்பரம்-

ரியோ, கேபி என்று இரண்டு விஜய் டிவி பிரபலங்கள் இறுதி போட்டியை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர். கடந்த வாரம் கடைசி நாமினேஷனில் ரியோ இடம்பெற்ற போது விஜய் டிவி சிரியல்களில் நடித்து வரும் சஞ்சீவ், ஆல்யா மானஸா, பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன், ராஜா ராணி சீரியல் இயக்குனர் பிரவீன், ஸ்ரீதேவி அசோக் என்று பலரும் ரியோவிற்கு ஹாட் ஸ்டாரில் 50 ஓட்டுக்களை போட்டு அதன் ஸ்க்ரீன் ஷாட்டுகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

- Advertisement -

இப்படி விஜய் டிவி பிரபலங்கள் அனைத்தும் ரியோ வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பு காட்டி வரும் நிலையில் விஜய் டிவி தொகுப்பாளராக ரக்சன், ஆரி பற்றி பதிவிட்டுள்ளார். சமீபத்தில் ஆரி பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை போட்டு சிக்கலில் சிக்கியுள்ளார்.அதில் ஆரிக்கு தனியார் வலைத்தளங்களில் வரும்வோட்டிங் விவரத்தை பதிவிட்டுள்ள ரக்ஷன், இவை எல்லாம் அதிகாரமற்ற வாக்கு எண்ணிக்கை. இது ஆரியின் Pr குழுவால் நடத்தப்பட்டு வருகிறது. இதையெல்லாம் நம்பாதீர்கள். இவை போலியானவை. இன்று 10.30 வாக்கெடுப்பு நடைபெறும் ரியோ ரசிகர்கள் தயாராக இருங்கள் என்று பதிவிட்டு இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-62-1024x913.jpg

இதை பார்த்த ஆரி ரசிகர்கள் பலரும் ரக்‌ஷன் மீது காண்டாகி அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.இப்படி ஒரு நிலையில் அந்த பதிவு குறித்து விளக்கமளித்துள்ள ரக்‌ஷன், பிக் பாஸ் பார்க்கும் அனைவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். என்னுடைய கடைசி பதிவு ஏதோ ஒரு தவறால் ஏற்பட்டுவிட்டது. எனக்கு ஒரு சிலர் கால் செய்து சொன்ன பிறகு தான் அதை கவனித்தேன். எனக்கு ஆரி அண்ணனை நன்றாக தெரியும். அவரை நான் நேரில் கூட சந்தித்து இருக்கேன். இது எந்த உள்நோக்கத்துடன் போட்டது இல்லை. அவர் வெளியில் வந்ததும் அவரை சந்திக்க காத்துக்கொண்டு இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement