சங்கடத்திற்கு உள்ளாக இருந்த கேபி – ஆரி என்ன செய்துள்ளார் பாருங்க. மனமார பாராட்டும் ராசிகள்.

0
62439
aari
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 12 வாரங்கள் நிறைவுசெய்து 13வது வாரத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ஆரியும் ஒருவர். நெடுஞ்சாலை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட ஆரி அதன்பின்னர் நடித்த படங்கள் அவ்வளவாக கவனிக்கப்படவில்லை. இருப்பினும் இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். தற்போது இவர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

ஆரம்பம் முதலே ஆரிக்கு பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட போட்டியாளர்களில் விரோதம் தான் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் ஆரி எப்போதும் அறிவுரை செய்து கொண்டே இருக்கிறார். மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் என்று மற்ற போட்டியாளர்களை அனைவருமே இவருக்கு முத்திரை குத்தினார்கள். ஆனால், நாட்கள் செல்ல செல்லஆரிக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. மேலும், இந்த சீசனில் அதிக முறை நாமினேட் செய்யப்பட்ட ஆண் போட்டியாளர்களில் ஆரி இதன் முதல் ஆளாக இருந்து வருகிறார்.

- Advertisement -

இருப்பினும் இவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவால் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகிறார். பிக் பாஸ் வீட்டில் இவர் எதார்த்தமாக செய்த பல செயல்கள் அவ்வப்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று அவர்களை நெகிழ்ச்சியடை செய்துவிடுகிறது. அந்த வகையில் கடந்த புதன் கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஆரி செய்த விஷயம் ரசிகர் பலரின் பாராட்டை பெற்று இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது

இப்படி ஒரு நிலையில் கடந்த புதன்கிழமை ரம்யா பாண்டியன் குடும்பத்தினர் வந்து சென்ற பிறகு பிக் பாஸ் வழக்கம்போல போட்டியாளர்களுக்கு Freeze டாஸ்க் கொடுத்துக்கொன்டிருந்தார். அப்போது கிச்சனில் கேப்பிரில்லா இருந்தபோது அவர் எதையோ எடுக்க கீழே குனிந்தார். அந்த சமயத்தில் கேப்ரில்லாவிற்கு பிக் பாஸ் Freeze என்று அறிவித்து விட்டார்.அப்போது ஆரி அருகில் நின்று கொண்டிருந்தார். கேப்ரில்லா கீழே குனிந்தபடி இருந்ததால் அவரது உடை விலகியதை கவனித்து அங்கே இருந்த ஒரு துணியை எடுத்து போர்த்தி விட்டார் ஆரி. ஆரியன் இந்த செயலை சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement