நயன் லுக்கில் ஆர்த்தி போட்ட புகைப்படம் – விக்னேஷ் சிவன் போட்ட கமண்ட்டால் வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
432
nayanthara
- Advertisement -

நடிகை நயன்தாராவின் திருமண உடை போலவே அணிந்து நிகழ்ச்சியில் பிரபலம் ஒருவர் கலந்து இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதிலும் சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் O2. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

- Advertisement -

இதையும் பாருங்க : தன்னுடைய Home Tour வீடியோவை வெளியிட்ட பாரதி கண்ணம்மா லட்சுமி – அட, இவர் அப்பா இந்த சீரியல் நடிகர் தானா.

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம்:

இப்படத்தை தொடர்ந்து நயன் பெற்று கனெக்ட், ஜவான், கோல்ட், நயன்தாரா 75, இறைவன், காட்ஃபாதர், திரில்லர் படம் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா திருமணம் நடந்து முடிந்தது. ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. இவர்களின் இல்லற வாழ்வு சிறக்க திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். அதோடு கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்தது விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் தான்

-விளம்பரம்-

நயன் திருமண ஆடை:

இவர்களுடைய திருமண உடைகள் புகழ்பெற்ற ஜேட் குழுமத்தால் நயன் விருப்பப்படி தனித்துவமாய் வடிவமைக்கப்பட்டிருந்தது. நடிகை நயன்தாரா சிவப்பு நிற புடவை அணிந்திருந்தார். நவீன காலத்திற்கு ஏற்றவாறு புடவை சற்றும் குறையாத வண்ணம் வடிவமைக்கப் பட்டிருந்தது. பார்டரில் வரலாற்று சிறப்புமிக்க கொய்ராலா கோயில்களின் கட்டிடங்கள் அச்சிடப்பட்டிருந்தது. மிக நீளமான பல்லு, சிவப்பு நிற மிக துணியில் ஆன வெய்யில் (மகளிர் திருமணத்தின் போது அணியும் முக்காடு) ஆகியவை பார்வையாளர்களின் கவனத்தை அதிகம் இருக்கிறது. இந்த ஆடை உடுத்துவதற்கு ஏற்ப மிகவும் குறைவான எடையில் வடிவமைக்கப்பட்டு இருந்தார்கள்.

பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சி:

இந்து புராணங்களின்படி லக்ஷ்மி தெய்வம் அதிர்ஷ்டத்தையும் வளத்தையும் குறிக்கிறது. இப்படி மிக அழகான ஆடையை நயன் அணிந்து இருந்தார். இதனையடுத்து பலருமே நயன்தாரா உடையை போலவே வடிவமைத்து போட்டோ ஷூட் நடத்தியிருந்தார்கள். இந்த நிலையில் காமெடி நடிகை ஆர்த்தியும், நடிகை நயன்தாராவின் ஆடை போல் உடையணிந்து இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

காமெடி நடிகை ஆர்த்தி பதிவிட்ட புகைப்படம்:

இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் நடனமாடி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் சதீஷ் நடுவராக பங்கேற்றிருக்கிறார்கள். இதில் பிரபல காமெடி நடிகை ஆர்த்தி தன்னுடைய கணவருடன் சேர்ந்து நடனம் ஆடி இருக்கிறார். இந்த வாரம் ஆஹா கல்யாணம் சுற்று நடைபெறுகிறது. இதில் ஆர்த்தி நடிகை நயன்தாராவின் திருமண உடையில் இருக்கிறார்.

விக்னேஷ் சிவன் போட்ட கமன்ட் :

அந்த புகைப்படத்தை அவரை சோசியல் மீடியாவில் பதிவிட்டு என்ன கொடுமை இது என ஜாலியாக பதிவு செய்திருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் ஆர்த்தியின் இந்த பதிவிற்கு கமன்ட் செய்துள்ள விக்னேஷ் சிவன் ‘நீங்க அதைவிட அழகாக இருக்கிறீர்கள் ஆர்த்தி’ என்று கமண்ட் செய்ய அதனை ரசிகர்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்..

Advertisement