எல்லார்கிட்டையும் போய்டுவீங்களா…? அவ்ளோ சீப்பா நீங்க..? அதான் வீடியோ போட்றாங்களே.! வறுத்தெடுத்த ஆர்த்தி

0
415
Aarthi

கடந்த சில நாட்களாக சீரியல் நடிகை நிலானி என்பவரால் உதவி இயக்குனராக இருந்த காந்தி லலித்குமார் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லலித் குமார் தற்கொலைக்கு பின்னர் நிலானி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி நிலானி மீது பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

லலித் குமார் தற்கொலைக்கு பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நிலானி, நான் லலித் குமாருடன் பழகியது உண்மை தான். ஆனால், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்து அவரிடம் இருந்து விலகிவிட்டதாகவும். அவர் தான் தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்லி டார்ச்சார் செய்தார் பின்னர் அவரே தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கண்ணீர்மழ்க தெரிவித்திருந்தார் நிலானி.

ஆனால், லலித் குமார் இறப்பிற்க்கு பின்னர் நிலானி பற்றிய பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ள வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஆர்த்தியிடம் நிலானி குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது பேசிய ஆர்த்தி, ஒரு நடிகை என்றால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.சாதாரண ஒரு பெண் தப்பு பண்ணாலும் தப்புதான், ஒரு நடிகை தப்பு பண்ணாலும் தப்பு தான். ஆனால், ஒரு நடிகை தவறு செய்தால் அது பெரிதாக பரவி விடும்.

Nilani-1

அதனால் நாம் எப்போதும் கண்ணியமாகவும், ஒழுக்கமாகவும் நடந்துகொள்ள வேண்டும். ஒரு நடிகையால் மற்ற அணைத்து நடிகைக்கும் கேட்ட பெயர் வந்துவிட கூடாது. நான் சமீபத்தில் நிலானியின் பேட்டியை கண்ட போது அதில் லலித் குமாருக்கு நிறைய பிரலங்களை தெரியும் என்பதால் எனக்கு வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக நிலானி கூறியிருந்தார்.

அப்படி ஒருவர் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி உங்களை ஏமாற்றும் அளவிற்கு நீங்கள் அவ்வளவு சீப்பா நீங்க(நிலானி). அப்போ ஏமாந்து எல்லாரிடமும் போய் விடுகீர்களா?அதே போல லலித் குமாருடன் குறும்படத்தில் நடித்த போது எடுத்த புகைப்படங்கள் தான் தற்போது வெளியாகியுள்ளது என்று நிலானி கூறியிருப்பது முற்றிலும் பொய் என்று தான் எனக்கு தோன்றுகிறது. ஒருவர் தப்பு செய்தால் அவர்களை பார்த்தாலே எனக்கு தெரிஞ்சிவிடும். ஆனால், நிலானியை பார்க்கும் போது எனக்கு பாவமாக தோன்றவில்லை. உன்மையில் லலித் குமார் பெண்களை ஏமாற்றுபவர் என்றால் அவர் தன்னுடைய உயிரை மாய்திருக்க மாட்டார். இதனால் எனக்கு என்னவோ நிலானி மீது தான் தப்பு என்று தோன்றுகிறது என்று பேசியுள்ளார் நடிகை ஆர்த்தி.