மும்தாஜ் அக்கா சிங்கம்…நஷ்டம் உங்களுக்கு இல்ல Darling..! வெளியேறிய மும்தாஜை புகழ்ந்து தள்ளிய பிக்பாஸ் போட்டியாளர்.!

0
1007
Mumtaj
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வர நாமினேஷனில் இடம்பெற்றிருந்த மும்தாஜ், ஐஸ்வர்யா,ரித்விகா, விஜயலட்சுமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதில் மும்தாஜ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. மும்தாஜின் வெளியேற்றத்தை குறித்து காமெடி நடிகையும், முன்னாள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான ஆர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

- Advertisement -

இதுகுறித்து நடிகை ஆர்த்தி பதிவிட்டுள்ளது என்னவெனில், உங்களின் கடின உழைப்பு,நேர்மை, உண்மை, இறக்க குணம் என்று அனைத்தையும் நான் விரும்புகிறேன். உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இது உங்களின் இழப்பு அல்ல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பட்ட இழப்பு என்று பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 2 பட்டத்தை மும்தாஜ் தான் வெல்வார் என்று ஏற்கனவே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஆர்த்தி, பிக் பாஸ் 2 பட்டத்தை கண்டிப்பாக மும்தாஜ் அல்லது சென்ராயன் தான் வெல்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். ஒரு பெண்ணாக மும்தாஜிற்கு தான் என்னுடைய முதல் உரிமை. வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளையும் உண்டு ” என்று தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், ஆர்த்தி கூறியதற்கு எதிர்மாறாக சென்ராயன் மற்றும் மும்தாஜ் இருவருமே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். இந்நிலையில் மும்தாஜ் வெளியேறியதற்கு பின்னரும் மும்தாஜின் வெளியேற்றத்தை ஏற்கமுடியாத ஆர்த்தி பிக் பாஸை மீண்டும் குறை கூறியுள்ளார்.

Advertisement