நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருக்கிறது. மேலும், அஜித் இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து அஜித் படம் வெளியாகி இருப்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். மேலும், இந்த படம் ரசிகர்களின் 3 வருட காத்திருப்பை ஓரளவிற்கு பூர்த்தி செய்து இருந்தாலும் ஜென்ரல் ஆடியன்ஸை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை.
ஹேட்டர்ஸ்களை சம்பாதித்த அபிஷேக் :
பொதுவாகவே பிக்பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் உள்ளே சென்று அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் பொறுத்து தான் வெறுப்பை சம்பாதிப்பார்கள். ஆனால், அபிஷேக் பல பேரின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டு தான் நிகழ்ச்சியின் உள்ளே சென்று இருக்கிறார். அதிலும் இவர் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்ட விதத்தை பார்த்து பலரும் இவரை கழுவி கழுவி ஊற்றினார்கள். இதனாலே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மூன்றாவது வாரத்தில் வெளியேற்றப்பட்டார்.
பின் வைல்ட் கார்ட் என்றி மூலம் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் நுழைந்து இருந்தார். மீண்டும் மாறாமல் அதே திமிரு, அடாவடித்தனம், அடித்து பேசுவது என்று பிரியங்காவுடன் தேவையில்லாமல் வேலைகளை செய்து கடந்த வாரம் நடந்த எழிமினேஷனில் அபிஷேக் குறைந்த வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு இருந்தார்.பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த அபிஷேக் பிக் பாஸ் வீட்டில் நடந்த விஷயங்களை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.
பிக் பாஸுக்கு பின் முதல் விமர்சனம் :
அதில் அவர் கூறியது, இந்த நிகழ்ச்சியில் என்னைப் பற்றி என்ன சொன்னாலும் பொதுமக்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் தனது யூடுயூப் பக்கத்தில் எந்த வீடியோவையும் பதிவிடாமல் தான் வருகிறார். இருப்பினும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை விமர்சனம் செய்துள்ளார் பிக் பாஸ் புகழ் அபிஷேக்.
அபிஷேக்கை பூர்த்தி செய்யாத வலிமை :
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அபிஷேக் எந்த ஒரு படத்தையும் விமர்சனம் செய்யவே இல்லை. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் முதல் முறையாக வலிமை படத்தை தான் விமர்சனம் செய்துள்ளார். மேலும், இந்த படம் தம்மை முழுவதுமாக திருப்திப்படுத்தவில்லை என்று கூறியுள்ளார். மேலும், அஜித் பற்றியும் படத்தின் கதை பற்றியும் ஒரு முழு விமர்சனத்தையே கொடுத்து இருக்கிறார் அபிஷேக்.