பாவனி விஷயத்தில் உங்கள் மனைவி எப்படி ரியாக்ட் செய்தார் – முதன் முறையாக மனம் திறந்த அபிநய்.

0
710
abhinay
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 84 நாட்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் போட்டிகளும், சவால்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இதனால் போட்டியாளர்களுக்குள் கலவரம் தொடங்கி இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 12 பேர் வெளியேறி இன்னும் 18 பேர் உள்ளே இருக்கின்றனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-157.png

பாவனியால் டேமேஜ் ஆன பெயர் :

அதிலும் நேற்றய நிகழ்ச்சியில் வருண், அக்ஷரா என்று டபுள் ஏவிக்ஷன் நடைபெற்று இருந்தது ரசிகர்களை பெரும் ஷாக்கில் ஆழ்த்தியது. அதே போல கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அபிநய் வெளியேறி இருந்தார். அபிநய், உள்ளே இருந்த வரை பாவனியிடம் தான் அதிக நெருக்கம் காட்டி வந்தார். மேலும், அவரிடம் இவர் லெட்டர் எழுதி கொடுத்ததாக பவானி கூறியதில் இருந்தே இவரது பெயர் டேமேஜ் ஆனது.

- Advertisement -

அபிநய்யின் முதல் பதிவு :

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் பதிவை போட்டு இருந்த அபிநய் ‘ அதில் மீண்டும் ரியல் உலகத்திற்கு வந்து இருப்பதில் மகிழ்ச்சி. இந்த பிக்பாஸ் பயணத்தில் எனக்கு நீங்கள் அளித்த அன்பையும் ஆதரவையும் கண்டு நான் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறேன். இந்த 78 நாளில் நான் நிறைய விஷயங்களை கொண்டு வந்திருக்கிறேன். அதுவும் கமல் சார் போன்ற ஒரு மிகப் பெரிய மனிதர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் நான் இருந்ததை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன்.

This image has an empty alt attribute; its file name is 1-201-1024x881.jpg

வாழ்க்கையில் எப்போதும் இரண்டு பக்கங்கள் இருக்கும் அதை எந்த பக்கத்தை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் வாழ்க்கை பயணமும். அமையும் நிகழ்ச்சியில் நீங்கள் பார்த்தது போல எனக்கு அதிர்ஷ்டம் அமையவில்லை ஆனால், எனக்கு ஒரு அன்பான குடும்பம் கிடைத்திருக்கிறது. எப்போதும் என்னுடைய இன்ப துன்பங்களில் அவர்கள் எனக்காக நின்று இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மனைவி என்ன சொன்னார் :

ஒரு சில சமயங்களில் என்னை தவறாக புரிந்து கொண்டு இருக்கலாம். ஆனால், அனைத்திற்கும் மேலாக இது வெறும் ஒரு நிகழ்ச்சிதான் அதை நாம் அப்படி தான் பார்க்கவேண்டும் என்று பதிவிட்டு இருந்தார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார் அபிநய். அப்போது பாவனியின் குற்றச்சாற்றிக்கு உங்கள் மனைவி என்ன சொன்னார் என்று கேள்வி கேட்டிருந்தார்.

Bigg Boss Abhinay Concerns On Pavni - time.news - Time News

பாவனி நடிக்கிறாரா ?

அதற்கு பதில் அளித்த அபிநய், எல்லா மனைவிமார்களை போலதான் அவரும் ரியாக்ட் செய்தார். ஆனால், நமக்குள் நடக்கும் விஷயத்தை எப்படி நீங்கள் கையாளுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். இறுதியில் குடும்பம்தான் அனைத்தும்’ என்று பதிவிட்டிருக்கிறார். அதேபோல இன்னொரு ரசிகர் பாவணி மிகவும் நடிக்கிறாரா என்று கேட்டதற்கு ஒவ்வொருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது அதேபோல இந்த விளையாட்டை விளையாடும் அணுகுமுறை இருக்கிறது அதனால் நான் அதைப்பற்றி நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்று பதிலளித்திருக்கிறார்

Advertisement