மருத்துவ சீட் வாங்கி தருவதாக லட்ச கணக்கில் மோசடி செய்த அபிநயின் மனைவி – போலி சான்றிதழ் வரை அனுப்பி மோசடி.

0
434
Abinay
- Advertisement -

பிக் பாஸ் பிரபலம் அபிநயின் மனைவியை போலீஸ் வலை வீசி தேடி வரும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறு சீசன்களை கடந்து இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் அபிநய். இவர் வேற யாரும் இல்லைங்க, காதல் மன்னன் ஜெமினி கணேசனின் பேரன் ஆவார்.

-விளம்பரம்-

மேலும், அபிநய் அவர்கள் ராமானுஜம், சென்னை 6000028-2 போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இதனிடையே இவர் அபர்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் பிக் பாஸ் அபிநயின் மனைவியை போலீஸ் தேடிவரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

ஆடை வடிவமைப்பாளர் மஞ்சு:

அதாவது, சென்னை மாம்பழம் ஆற்காடு சாலையை சேர்ந்தவர் மஞ்சு. இவர் ஆடை வடிவமைக்கும் தொழிலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இவர் சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு ஆடைகளை வடிவமைத்து கொடுத்து வருகிறார். அந்த வகையில் நடிகரும், பிக் பாஸ் பிரபலமான அபிநயின் மனைவி அபர்ணா வைத்திருக்கும் ஜவுளி கடைக்கும் மஞ்சு ஆடைகளை வடிவமைத்து சப்ளை செய்திருக்கிறார்.

மஞ்சு-அபர்ணா நட்பு:

அபிநய் நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் என்பதால் மிகுந்த மரியாதையோடு மஞ்சு என்பவர் அபர்ணா குடும்பத்தினுடன் பழகி வந்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு மஞ்சுவின் மகள் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதி இருக்கிறார். ஆனால், அதில் அவர் தேர்ச்சி அடையவில்லை. இதனால் அவர் விருப்பப்படி கல்லூரி கிடைக்காத விஷயத்தை அபர்ணாவிடம் சொல்லி இருக்கிறார் மஞ்சு. பின் தனக்கு தெரிந்த பிரபல மருத்துவ கல்லூரியில் தனக்கு நண்பர் இருப்பதாகவும், 20 லட்ச ரூபாய் கொடுத்தால் உன் மகளுக்கு மருத்துவ கல்லூரியில் சீட்டு வாங்கி தருகிறேன்.

-விளம்பரம்-

மஞ்சுவை ஏமாற்றிய அபர்ணா:

மேலும், பணத்தை கொடுத்து விட்டு மருத்துவ சீட்டை புக் செய்துவிடலாம். மீதி பணத்தை கல்லூரியில் சேர்ந்த பின் செலுத்திக் கொள்ளலாம் என்றும் மஞ்சு இடம் அபர்ணா கூறியிருக்கிறார். இதை நம்பி ஆடை வடிவமைப்பாளர் மஞ்சு கடந்த ஜனவரி மாதம் 5 லட்சம் ரூபாயை அபர்ணாவின் நண்பரான அஜய்யின் வங்கி கணக்கிற்கு செலுத்தியிருக்கிறார். பணத்தை பெற்றுக் கொண்ட அபர்ணா 5 நாட்கள் கழித்து whatsappல் மருத்துவ சீட்டு கிடைத்து விட்டதாக கூறி சான்றிதழ் அனுப்பி இருக்கிறார். இதனை அடுத்து அபர்ணா அனுப்பிய சான்றிதழை எடுத்துக்கொண்டு தன்னுடைய மகளை அந்த மருத்துவ கல்லூரியில் சேர்ப்பதற்காக மஞ்சு சென்றிருக்கிறார்.

அபர்ணா மீது புகார்:

அப்போது தான் இது போலியான சான்றிதழ் என்று கல்லூரி நிர்வாகத்தினர் மஞ்சு இடம் கூறி இருக்கிறார்கள். பின் தான் ஏமாந்ததை அறிந்த மஞ்சு பணத்தை கேட்டு அபர்ணாவிடம் கடைக்கு சென்று இருக்கிறார். ஆனால், அபர்ணா நீங்கள் அந்த பணத்தை என்னுடைய நண்பருக்கு தான் அனுப்பி இருக்கிறீர்கள். அவரிடம் சென்று அந்த பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி தன்னுடைய கடையை மூடி விட்டு தலைமறைவாகி இருக்கிறார் அபர்ணா. இதனால் மணமுடைந்த ஆடை வடிவமைப்பாளர் மஞ்சு மாம்பழம் காவல் நிலையத்தில் அபர்ணா மீது புகார் அளித்திருக்கிறார். அபர்ணா அவருடைய நண்பர் அஜய் மீது மோசடி, போலியான ஆவணம் உருவாக்குதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக இருவரையும் தேடி வருகிறது.

Advertisement