பிக் பாஸ் நிகழ்ச்சி 91 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. இதுவரை 12 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சஞ்சீவ், சிபி, அமீர், நிரூப் என்று 8 பேர் மட்டும் இருக்கின்றனர். இதில் இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகி இருந்த நிலையில் பிக் பாஸில் மிகவும் எதிர்பார்கப்படும் Ticket To Finale டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த டாஸ்கில் முதல் நாளே நிரூப் வெளியேறி இருந்தது பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது. மேலும், இந்த டாஸ்கில் அமீர் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேறி இன்னும் 12 பேர் உள்ளே இருக்கின்றனர். அதிலும் வருண், அக்ஷரா என்று டபுள் ஏவிக்ஷன் நடைபெற்று இருந்தது ரசிகர்களை பெரும் ஷாக்கில் ஆழ்த்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே எதாவது ஒரு காதல் கதை இருந்துவிடும் ஆனால், இந்த சீசனில் பங்கேற்றுள்ள பெரும்பாலானோர் திருமணம் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஆரம்பத்தில் அக்ஷரா – வருண் இருவருக்கும் ஒரு கெமிஸ்ட்ரி சென்று கொண்டு தான் இருந்தது.
அபிநய் – பாவனி பஞ்சாயத்து :
ஆனால் , அவர்களை மிஞ்சும் அளவு பெரும் சர்ச்சையை கி;கிளப்பியது அபிநய் – பாவனி பஞ்சாயத்து தான். அபிநய், உள்ளே இருந்த வரை பாவனியிடம் தான் அதிக நெருக்கம் காட்டி வந்தார். மேலும், அவரிடம் இவர் லெட்டர் எழுதி கொடுத்ததாக பவானி கூறியதில் இருந்தே இவரது பெயர் டேமேஜ் ஆனது. சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார் அபிநய்.
மனைவி என்ன சொன்னார் :
அப்போது பாவனியின் குற்றச்சாற்றிக்கு உங்கள் மனைவி என்ன சொன்னார் என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த அபிநய், எல்லா மனைவிமார்களை போலதான் அவரும் ரியாக்ட் செய்தார். ஆனால், நமக்குள் நடக்கும் விஷயத்தை எப்படி நீங்கள் கையாளுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். இறுதியில் குடும்பம்தான் அனைத்தும்’ என்று பதிவிட்டு இருந்தார்.
பெயரை மாற்றியுள்ள அபிநய் மனைவி :
இப்படி ஒரு நிலையில் அபிநய்யின் மனைவி அபர்ணா, தன்னுடைய பெயரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாற்றி இருக்கிறார். இதற்கு முன் வரை அபர்ணா அபிநய் என்று பெயர் வைத்து இருந்த இவர் தற்போது அபிநய் பெயரை நீக்கிவிட்டு அபர்ணா வரதராஜன் என்று மாற்றி இருக்கிறார். இவர் இப்படி மாற்றி இருப்பது ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பாவனி விவகாரத்தின் போது அபர்ணா போட்ட பதிவு :
அபிநய் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது, ராஜு அவரிடம் பாவனிய லவ் பண்றீங்களா என்று கேட்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த அபர்ணா, எப்படி இருந்தாலும் இறுதியில் நீ எப்படிபட்ட நபர் என்பது எனக்கு தெரியும். என்னை தவிர உன்னை பற்றி யாருக்கும் தெரியாது. எப்போதும் உன்னை காதலிப்பேன் என்று பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.