‘கூட்டிட்டு போய் ஏமாத்திட்டாங்க’ – பிக் பாஸ் குறித்த ரகசியங்களை உடைத்த Friends பட நடிகை.

0
506
abhinaya
- Advertisement -

தெலுங்கு பிக் பாஸ் ரகசியங்களை அபிநயஸ்ரீ போட்டு உடைத்திருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்தியா முழுவதும் மிக பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். இதை முதன் முதலாக ஹிந்தியில் தான் ஒளிபரப்பி இருந்தார்கள். அதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், தமிழில் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறார்கள். சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்தது.

-விளம்பரம்-

மேலும், தமிழை போலவே தெலுங்கிலும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கு பிக் பாஸில் விஜய் பட நடிகை அபிநயா ஸ்ரீ போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களை கடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அபிநயா ஸ்ரீ வெளியேறி இருக்கிறார்.

- Advertisement -

அபிநயா ஸ்ரீ அளித்த பேட்டி:

இந்நிலையில் இது குறித்து அபிநயா ஸ்ரீ பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர் தெலுங்கு பிக் பாஸ் குறித்து கூறியிருந்தது, நம்ப நினைக்கிற மாதிரி எல்லாம் பிக் பாஸ் வீட்டுக்குள் நடப்பது இல்லை. உண்மையை சொல்லப் போனால், என்னை அவர்கள் காட்டவே இல்லை. நான் டாஸ்க் செய்ததும், போட்டியாளர்களிடம் ஆர்கியுமென்ட் பண்ணதும் எதையுமே அவர்கள் காட்டவில்லை. அவர்களுக்கு தேவையானவர்களை மட்டும் காண்பித்து அவர்களுக்கு தேவையானதை மட்டும் டெலிகாஸ்ட் செய்கிறார்கள்.

நிகழ்ச்சி குறித்து அபிநயா ஸ்ரீ சொன்னது:

அதே போல் நான் நாமினேஷனில் இருந்தேன். இருந்தாலும் எனக்கு ஓட்டு போட்டு சேப் ஜோனுக்கு வந்தேன். இருந்தும் என்னை எலிமினேட் செய்திருக்கிறார்கள். உங்களுக்கு வேண்டியவர்களை காப்பாற்றுவதற்கு ஏன் வோட்டிங் என்ற முறையை வைக்கிறீர்கள்? நீங்களே வாரத்திற்கு ஒருவரை எலிமினேட் செய்யலாம் இல்லையா? எதற்கு தேவையில்லாமல் ரசிகர்களிடம் ஓட்டு வாங்கி நீங்கள் எலிமினேட் செய்கிறேன் என்று சொல்கிறீர்கள். அதேபோல் தமிழ் பிக் பாஸில் கமலஹாசன் அவர்கள் எல்லா போட்டியாளர்களிடமே நன்றாக பேசுவார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டில் நடந்தது:

ஆனால், தெலுங்கில் அப்படி இல்லை. அவர்களுக்கு தேவையான நபர்களிடம் மட்டும் பேசி முடிக்கிறார்கள். எனக்கு ரொம்ப மன வருத்தமாக இருக்கிறது. என்னுடைய அம்மாவும் ரொம்ப கவலை பட்டார். பிக் பாஸ் இடமே கால் செய்து என் மகளை ஏன் காண்பிக்க மாட்டீர்கள்? அப்படியே காண்பித்தாலும் ஒரு சில நிமிடம் மட்டும் தான் காண்பிக்கிறீர்கள் என்று சண்டை போட்டார்கள். 24 மணி நேரம் என்று சொல்கிறார்கள் அதையும் கட் செய்துதான் காண்பிக்கிறார்கள். அப்படியே லைவாக காண்பிக்க மாட்டார்கள்.

அபிநயா ஸ்ரீ குறித்த தகவல்:

பிக் பாஸ் வீட்டிற்குள் அதே மனநிலையில் தான் நானும் இருந்தேன், நான் வெளியேறியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார் அபிநயா ஸ்ரீ . 80, 90 கால கட்டங்களில் தமிழ் சினிமா உலகில் கவர்ச்சியிலும், குணச்சித்திர வேடத்திலும், படங்களில் கதாநாயகியாகவும், ரசிகர்களின் கனவு கன்னியாகவும் ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை அனுராதா. இவருடைய மகள் தான் நடிகை அபிநயஸ்ரீ. நடிகை அபிநயஸ்ரீ திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் சிறந்த நடன இயக்குனரும் ஆவார்.

Advertisement