ஆமா, நீங்க தம் அடிப்பீங்களா, லைவில் கேட்ட ரசிகர் – ரோட்டில் தம் அடிப்பவர்களை எல்லாம் உதாரணம் சொன்ன அபிராமி,

0
415
Abhirami
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிராமி. இவர் பரதநாட்டியத்தில் மிகச் சிறந்த கலைஞர் என்றும் சொல்லலாம். இவர் மாடலிங் மூலம் தான் மீடியாவுக்குள் நுழைந்தார். அதன் பின் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானாலும் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து கொண்டார் என்று சொல்லலாம். அந்த பிக் பாஸ் சீசனில் இவருடைய ஆடை, மதுமிதாவிற்கும் இவருக்கும் இடையே நடந்த கலாச்சாரம் பிரச்சனை, அபிராமி –கவின் காதல், முகென் காதல் என இவரது பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

ஆனால், இதை எல்லாம் மறக்கும் வகையில் இவருடைய படம் அமைந்தது. வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளி வந்த படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை போனிகபூர் அவர்கள் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அபிராமி அவர்கள் சிறப்பான முறையில் நடித்து இருந்தார். இதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அபிராமி ஒரு சில படங்களில் நடித்து இருந்தார். அதோடு பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வந்தார்.

- Advertisement -

சர்ச்சையில் சிக்கிய அபிராமி :

இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸ் அல்டிமேட்டில் மீண்டும் பங்குபெற்றார். இந்த சீசனிலும் இவர் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இதே சீசனில் பங்குபெற்ற நிரூப்பும் இவரும் காதலித்து பிரேக்கப் செய்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சீசனில் அபிராமி, நிரூப்பை விட பாலாஜியிடம் தான் அதிக நெருக்கம் காட்டி வந்தார். என்னதான் இனி நாங்கள் சேரப்போவது இல்லை என்று நிரூப் கூறிக்கொண்டு வந்தாலும் பாலாஜி, அபிராமி மீது காட்டும் பரிவை நிரூப்பால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

புலம்பிய நிரூப் :

அதுவும் ஒரு எபிசோடில் ஸ்மோகிங் ரூமில் பாலாஜி, அபிராமி இடுப்பை கிள்ளியதாக வனிதாவிடம் புலம்பிய நிரூப், அவனுக்கு எங்க ரெண்டு பேருக்கு என்ன நடந்ததுன்னு அவனுக்கு நல்லா தெரியும், நீ வெளிய போய் என்ன கருமத்த வேனா பண்ணு ஆனா, என் முன்னாடி பண்ணாத என்று புலம்பி இருந்தார். ஆனால், இதுகுறித்து விளக்கமளித்த பாலாஜி, ஒரு பொண்ணு இந்த விஷயத்தில் சம்மந்தப்பட்டு இருக்கிறார் அதனால் தான் நான் அவனிடம் இது பற்றி பேசவில்லை.

-விளம்பரம்-

பாலாஜி கொடுத்த விளக்கம் :

அந்த ஸ்மோக்கிங் ரூமில் நின்று கொண்டு இருந்தேன். அப்போது தெரியாமல் என் கை மீது சாய்ந்துவிட்டாள். ஆனால், நான் அவள் இடுப்பை கிள்ளிவிட்டதாக சொல்லி இருக்கான். இத கேக்க சொல்ல எனக்கு எவ்ளோ காண்டா இருக்கும். மேலும், நான் அப்படி பண்ணேன்னு என்ன ஆதாரம் இருக்கு.மேலும், நான் பிக் பாஸ் கிட்டயே சொல்லிட்டேன் அப்படி எதாவது இருந்துச்சின்னா மக்கள்க்கு போட்டு காமிச்சிடுங்க என்று சொல்லிட்டேன் என்று கூறி இருந்தார்.

லைவில் அபிராமி பதில் :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் லைவ் ஒன்றில் இதுகுறித்து ரசிகர் ஒருவர் கேட்க ‘அதெல்லாம் ஒன்றுமே நடக்கவில்லை’ என்று கூறியுள்ளார் அபிராமி. அதே போல நீங்கள் தம் அடிப்பீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, அது என்னுடைய விருப்பம், அதை கேட்க யாருக்கும் உரிமையில்ல. ரோட்டில் எத்தன பசங்க தம் அடிக்கிறாங்க. ஆனா, இத ஒரு பொண்ணு பண்ணா மட்டும் ஏன் கேட்குறீங்க என்று கோபமாக கூறியுள்ளார் அபிராமி.

Advertisement