அபிராமியை மறைமுகமாக சாடிய சாக்‌ஷி.! பதில் அளித்துவிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தையே மூடிய அபிராமி.!

0
28720
sakshi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பிரபலமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் திகழ்ந்து வருகிறது. தற்போது தமிழில் நடந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் யார்? அந்த பிக் பாஸ் டைட்டில் வின்னர் என்று தெரிந்துவிடும். சென்ற வாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த பிரீஸ் டாஸ்கில் பல உணர்ச்சிபூர்வமான சம்பவங்களும்,கண்கலங்க வைக்கும் நிகழ்வுகளும் நடந்தது.அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடந்து இருக்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பல்வேறு திருப்பங்களும்,புரியாத நிகழ்வுகளும் நடந்தன.மேலும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குழு இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டது. இந்த வாரத்தில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சிறந்து விளங்குபவருக்கு நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்ல டிக்கெட் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

இதையும் பாருங்க : 3 வயதில் ஷெரீனை விட்டு சென்ற தந்தை இவர் தான்.! இதுவரை வெளிவராத புகைப்படம்.!

இதனால் இந்த வாரம் போட்டி மிகக் கடுமையாகவும் போட்டியாளர்களுக்கு உள்ளேயே சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர், யார் அந்த இறுதிப்போட்டியில் செல்ல இருக்கும் அதிர்ஷ்டசாலி என்று. இது குறித்து பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இப்படி போய்க்கொண்டிருக்கும் போது பிக் பாஸ் 3ல் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் ஒருவர் தான் நடிகை சாக்ஷி. இவர் தற்போது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் சிலர் பிக்பாஸில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை சந்தித்து அவர்களிடம் தவறான கருத்துக்களை பரப்புவதை முதலில் நிறுத்துங்கள்.

-விளம்பரம்-

நீங்கள் அவர்களை சந்தித்து பேசும்போது நல்ல விஷயங்களையும் அவர்கள் வாழ்வில் முன்னேற அவசியமான கருத்துக்களையும் பற்றி கூறுங்கள். அதுவும் பிக் பாஸ் வீட்டில் உங்களுக்கு யார் உறுதுணையாக இருந்தார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். சுயநலமாக எண்ணாமல் இருங்கள் என்று அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து நெட்டிசன்கள் பலபேர் பல கருத்துகளை பதிவிட்டு, இதை பார்த்தால் தற்போது அபிராமி தான் போட்டியில் இருந்து வெளியே வந்தவுடன் மற்ற போட்டியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டு வருகிறார் என்று கூறி உள்ளார்கள். இதனால் சாக்ஷி அபிராமி தான் குறிப்பிட்டு கூறுகிறார் என்று நெட்டிசன்கள் தெரியப்படுத்துகின்றன.

Image

இந்த நிலையில் அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஸ்டேட்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பிக்பாஸ் குறித்து கேள்வி கேட்பதை நிறுத்துங்கள் அதை விட்டு நான் வெளியே வந்துவிட்டேன். தற்போது படப்பிடிப்பிலும் எனது வேலையிலும் கவனம் செலுத்தி வருகிறேன். தற்போது சந்தோஷமாக இருக்கிறேன் எனவே, பிக்பாஸ் பற்றி எதுவும் எனக்குத் தேவையில்லை என்று பதிவிட்டுள்ளார். இது மட்டுமில்லாமல் இந்த பதிவிற்கு பின்னர் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் அபிராமி டெலிட் செய்துள்ளார்.

Advertisement