சிம்புவை போல டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் பிக் பாஸ் 3 நடிகை – யார் அது ? இவங்களுக்கு ஏன் கொடுத்தாங்க தெரியுமா ?

0
265
abhirami
- Advertisement -

பொதுவாகவே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அதில் ஒன்று தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பி வருகிறது. மேலும், பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி வெற்றிகரமாக சென்றதைத் தொடர்ந்து தற்போது 5வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

இந்த ஐந்து சீசன்களையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலருக்கும் வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அபிராமி.

- Advertisement -

மிஸ் தமிழ் நாடு அபிராமி :

இவர் மாடலாக தான் தனது பயணத்தைத் தொடங்கினார். பின் மிஸ் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து இவர் டிவி விளம்பரங்களில் நடித்து வந்தார். அதன் மூலம் தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே சென்றது. அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது தான் அபிராமி நடித்த நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி இருந்தது.

அபிராமியின் அஜித் படம் :

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளி வந்த படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை போனிகபூர் அவர்கள் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அபிராமி அவர்கள் சிறப்பான முறையில் நடித்து இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அபிராமி வெப்சீரிஸ்களிலும், படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் ஒரு நடிகை மட்டும் இல்லாமல் பரத நாட்டியக் கலைஞரும் ஆவார்.

-விளம்பரம்-

அபிராமிக்கு டாக்டர் பட்டம் :

இவர் சிறு வயதில் இருந்தே முறையாக பரத நாட்டியம் கற்று வருகிறார். இந்த நிலையில் பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதாக அபிராமிக்கு டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. மதர் தெரசா பல்கலைக் கழகத்தின் சார்பாக அபிராமிக்கு பரதநாட்டிய துறைக்காக டாக்டர் பட்டம் தரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதை அபிராமி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாயுடன் டாக்டர் பட்டம் வாங்கிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதைப் பார்த்த பலரும் அபிராமிக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் லைக் செய்தும், ஷேர் செய்தும் வருகிறார்கள்.

டாக்டர் சிம்பு :

இதேபோல் சமீபத்தில் நடிகர் சிம்புவுக்கும் டாக்டர் பட்டம் கிடைத்தது. தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக்கொண்டு இருப்பவர் சிம்பு. இவர் உடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இப்படி ஒரு நிலையில் தான் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. வேல்ஸ் பல்கலைக்கழகம் தான் இவருக்கு டாக்டர் பட்டம் அளித்து இருந்தது அதற்கான புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீசுக்காக மக்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

Advertisement