முகென் காதலியை பிக் பாஸ் நித்யாவுடன் இணைத்து கிண்டல் செய்யும் விதமாக மீம்.! அபிராமி ரியாக்ஷன்.!

0
11346
mugen-lover

பிக் பாஸ் வீட்டில் பல்வேறு காதல் கதை ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் முதன் முதலாக காதல் கதையை ஆரம்பித்தது அபிராமிதான். பிக் பாஸ் வீட்டின் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது கொஞ்சம் வெறுப்பான தோற்றமே இருந்து வந்தது. ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி அதன் பின்னர், முகெனை காதலித்து வந்தார்.

Image

அதன் பின்னர் அவரிடமும் சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்துவிட்டார். அபிராமி இருந்த வரை முகென் அவரை காதலிக்கவில்லை என்று ஆணித்தனமாக கூறியிருந்தார். அதே போல தனக்கு சிந்திய என்பவர் மீது ஒரு விதமான காதல் இருப்பதாகவும் கூறி இருந்தார் முகென். ஆனால், அபிராமி வெளியே சென்றதும் அவர் உடைத்து சென்ற மெடலை ஓட்ட வைத்துக்கொண்டு இருந்தார் முகேன். மேலும், முகென் மற்றும் அபிராமி இருவரும் காதலை மறைமுகமாக தான் வெளிப்படுத்தி வந்தனர்.

இதையும் பாருங்க : பிரேக்கிங் நியூஸ் : மதுமிதா விவகாரத்தில் மனித உரிமை அமைப்பில் வழக்கு பதிவானது.! சிக்கலில் போட்டியாளர்கள்.!

- Advertisement -

ஆனால், வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ என்ட்ரி ஆன பின்னர் அபிராமியிடம் முகென் குறித்து ஏதேதோ சொல்லி இருவருக்கும் சண்டையை ஏற்படுத்திவிட்டார். இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் முகெனுக்கு தனது ஆதரவை அளித்து வருகிறார் அபிராமி. பிக் பாஸ் வீட்டில் இருந்து அபிராமி வெளியேறியபோது முகென் ஒரு சில நினைவு பரிசுகளை கொடுத்து அனுப்பி இருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் அபிராமி, முகெனுக்கு தனது ஆதரவை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் முகேனின் காதலி சிந்தியாவையும் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பாலாஜியின் மனைவி நித்யாவையும் இணைத்து அபிராமி ரசிகர் பக்கத்தில் மீம் ஒன்று பரவி வந்தது.

இ இந்த மீமை கண்டு கடுப்பான அபிராமி, பக்கத்தை ரிபோர்ட் செய்யுமாறு கேட்டு கொண்டுள்ளார். மேலும், இதுபோன்ற செயல்களை எல்லாம் விரும்பவில்லை கூறியுள்ளார். ஏற்கனவே, முகென் காதலி முகென் பற்றி பதிவிட்ட பதிவை கண்ட அபிராமி, இனி பிக் பாஸ் பற்றி எந்த பதிவையும் போட மாட்டேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.