காஷ்மீரில் லோகேஷ்ஷுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் 3 நடிகை – அட, இவரும் இருக்காரா படத்துல ?

0
638
- Advertisement -

சமீபத்தில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘வாரிசு’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு என இரண்டும் ரசிகர்களை திருப்த்தி படுத்த தவறிய நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை தான் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதால் தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளுக்காக படக்குழு காஷ்மீர் சென்று இருக்கின்றனர். இந்த படத்திற்கு ‘ leo ‘ என்று தலைப்பு வைத்துள்ளனர். மேலும் படம் வரும் ஆக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கெளதம் மேனன், பிரியா ஆனந்த் என்று பலர் நடிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் பிக் பாஸ் ஜனனியும் நடிக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

- Advertisement -

மேலும் ஒரு பிக் பாஸ் பிரபலம் :

இப்படி ஒரு நிலையில் ஜனனியை தொடர்ந்து இந்த படத்தில் மற்றும் ஒரு பிக் பாஸ் பிரபலம் கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படத்தில் எதிர்பாராத பிரபலங்கள் சர்ப்ரஸ் ரோலில் வருவது வாடிக்கையான ஒன்று. அதிலும் குறிப்பாக விக்ரம் படத்தில் village cooking சேனல் டீம் வந்தது ரசிகர்கள் யாரும் எதிர்பாராத ஒரு விஷயம். அது திரையரங்கில் ஒரு சர்ப்ரைஸ் எலிமெண்ட்டாக இருந்தது. மேலும், விக்ரம் படத்திலேயே பிக் பாஸ் பிரபலங்களான ஷிவானி, மைனா, மகேஸ்வரி என்று பலர் நடித்து இருந்தனர்.

மேலும், லியோ படத்தில் கூட இணையத்தில் பிரபலமான பல பிரபலங்கள் நடிக்க இருக்கின்றனர். அந்த வகையில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்த அமலா ஷாஜி நடிக்கிறார் என்ற ஒரு தகவலும் உலா வந்தது. இதனை உறுதிபடுத்தும் விதமாக லியோ படக்குழு முதற்கட்ட படப்பிடிப்புகளுக்காக காஸ்மீர் சென்று இருந்த போது அமலா ஷாஜி தந்து இன்ஸ்டா பக்கத்தில் காஸ்மீரில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுஇருந்தார் .

-விளம்பரம்-

மேலும், லியோ படக்குழு காஸ்மிர் சென்ற அதே நாளில் விமான நிலையத்தில் இருந்தபடி அமலா ஷாஜி புகைப்படம் ஒன்றை போட்டு இருந்தார். இந்த பதிவில் ரசிகர் ஒருவர் ‘தளபதி 67’ ஆ என்று போட்ட கமெண்டை அமலா ஷாஜி pin செய்து வைக்க அமலா ஷாஜி ‘லியோ’ படத்தில் நடிப்பது உறுதி என்று அவரது ரசிகர்கள் முடிவெடுத்துவிட்டனர். அதே போல இந்த படத்தில் பிக் பாஸ் சீசன் 6 ஜனனியும் நடிக்கப்பதாக கூறப்பட்டு வருகிறது.

மேலும், இந்த படத்தில் ஜனனி, விஜய்யின் மகளாக நடிக்கிறார் என்ற செய்தியும் உலா வந்துகொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் அபிராமியும் இந்த படத்தில் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், அபிராமி காஷ்மீரில் லோகேஷ் கனகராஜுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அபிராமி ஏற்கனவே அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement