சரவணனுக்கு பின்னர் சாண்டி குடும்பத்தை நேரில் சந்தித்த போட்டியாளர்.! வைரலாகும் புகைப்படம்.!

0
5597
saravanan

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் விஜய் டிவி ஜோடி போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த சாண்டியும் ஒருவர். ஆரம்பத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் நடன இயக்குனராக பணியாற்றி வந்தார்.

அதன் பின்னர் இவர் ஜோடி நிகழ்ச்சியில் நடன இயக்குனராக பணியாற்றி வந்தார். தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சரிதான் போட்டியாளர்களுக்கும் சரி ரசிகர்களுக்கும் சரி மிகவும் பிடித்த போட்டியாளராக இருந்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் பல ஆரமிக்கள் கூட இவருக்கு உருவாகி உள்ளது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர்கள் சரவணனிடம் தான் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்.

- Advertisement -

அதேபோல மற்ற போட்டியாளர்கள் அனைவரையும் எப்போதும் கலாய்த்துக் கொண்டு சந்தோஷமாக வைத்து வருகிறார் சாண்டி. இதனால் மற்ற போட்டியாளர்களுக்கும் இவரை மிகவும் பிடித்து போய் விட்டது. சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த சரவணன் சாண்டியின் வீட்டுக்கு சென்று அவரது மனைவி மற்றும் மகளை நேரில் சந்தித்த புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறி இருந்த அபிராமி சாண்டியின் வீட்டிற்கு சென்று சாண்டியின் மனைவியையும் மகளையும் சந்தித்துள்ளார். மேலும், அப்போது எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் அபிராமி. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களின் சரவணன் மற்றும் அபிராமி தான் சாண்டியின் குடும்பத்தை நேரில் சந்தித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement