என்னை விற்கவேணும்னு அவசியம் இல்ல. இந்த பொழப்புக்கு நீங்க எல்லாம் **** – உருவக்கேலி குறித்து பிக் பாஸ் அபிராமி காட்டம்.

0
25683
abhirami
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதிலும் கடந்த மூன்றாவது சீசனில் தன காதல் காவியங்கள் கொடிகட்டி பறந்தது. அதில் முதன் முதலில் அபிராமி தான் காதலை தொடங்கி வைத்தவர். அபிராமி முதலில் கவினின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால்,கவின் கொஞ்சம் கூட அபிராமியை கண்டுகொள்ளவில்லை. பின்னர் கவினை கடுப்பு ஏற்றுவதற்காக தான் முகென் உடன் பழகினார். முதலில் நண்பனாக பழகினார் அபிராமி. பின் அவர் மீது அதுவே காதலாக மாறிவிட்டது.

-விளம்பரம்-

நாட்கள் செல்ல செல்ல முகென் மீது வைத்திருந்த அன்பு, பாசம் அனைத்தும் காதலாக மாறிவிட்டது என்று அவர் கூறியிருந்தார். அது மட்டும் இல்லைங்க கமலஹாசன் அவர்கள் போட்டியின்போது ஹீரோ யார்? வில்லன் யார் ?என்ற டாஸ்க் வைத்திருந்தார், அதில் அபிராமி கொஞ்சம் கூட யோசிக்காமல் என்னுடைய ஹீரோ முகென் தான் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய ஆடை, மதுமிதாவிற்கும் இவருக்கும் இடையே நடந்த கலாச்சாரம் பிரச்சனை, அபிராமி –கவின் காதல், முகென் காதல் என பிக்பாஸ் வீட்டில் எழுந்த இவரது பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஆனால், இதை எல்லாம் மறக்கும் வகையில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் இவருக்கு நல்ல மதிப்பு கிடைத்தது. இருப்பினும் சமூக வலைதளத்தில் இவரை திட்டித்தீர்த்து வரும் ஹேட்டர்ஸ்களும் குறைந்தபாடில்லை. இப்படி ஒரு நிலையில் தனது புகைப்படத்தை பயன்படுத்தி சிலர் மோசமாக பதிவுகளை வெளியிடுவதாக குற்றம் சாட்டி காட்டமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு இங்கே உள்ளோரை அழ வைக்கும் சுடுகாடு.

2016 இல் எடுத்த இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது சமூக வலைத்தளத்தில் இருக்கும் சில முட்டாள்களுக்கு வேறு வேலை கிடையாது. வேறு ஏதாவது வேலை இருந்தால் போய் பாருங்க. நான் வேலைக்கு சென்றாலும் செல்லவில்லை என்றாலும் என்னை பார்த்துக்கொள்ள என்னுடைய அம்மாவும் சகோதரரும் இருக்கிறார்கள். என்னை விற்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது உங்கள மாதிரி அடுத்தவங்கள மாணவர்களைவிட என்னுடைய மாடலின் விலை எவ்வளவோ கண்ணியமானது என்று காட்டமாக பதிவிட்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து அமைதியாக இருக்கும் நபர்களால் தான் பிரபலங்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement