போன சீசன்ல அஜித், இந்த சீசன்ல இவரை – கவனத்தை ஈர்த்த அபிராமியின் டி ஷர்ட். நல்லா கவர் பண்றங்கா Fansஅ.

0
506
abirami
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிராமி. இவர் பரதநாட்டியத்தில் மிகச் சிறந்த கலைஞர் என்றும் சொல்லலாம். இவர் மாடலிங் மூலம் தான் மீடியாவுக்குள் நுழைந்தார். அதன் பின் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானாலும் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து கொண்டார் என்று சொல்லலாம். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய ஆடை, மதுமிதாவிற்கும் இவருக்கும் இடையே நடந்த கலாச்சாரம் பிரச்சனை, அபிராமி –கவின் காதல், முகென் காதல் என இவரது பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

ஆனால், இதை எல்லாம் மறக்கும் வகையில் இவருடைய படம் அமைந்தது. வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளி வந்த படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை போனிகபூர் அவர்கள் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அபிராமி அவர்கள் சிறப்பான முறையில் நடித்து இருந்தார். இதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அபிராமி ஒரு சில படங்களில் நடித்து இருந்தார். அதோடு பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

தற்போதைய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமியும் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி என்பது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு. இந்த பிக் பாஸ் வேறு. மேலும், இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் ஒளிபரப்பி வருகின்றனர்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி:

இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அதோடு இதில் முதல் நாளே வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, தாமரை சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்துகொண்டனர். மேலும், முதல் நாளே பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி புகைபிடிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

-விளம்பரம்-

அன்று அஜித் படம் போட்ட டீ ஷர்ட்:

அதனை தொடர்ந்து நிரூப்க்கும் இவருக்கும் இடையேயான காதல் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து. இப்படி இருக்கும் நிலையில் தற்போது அபிராமியின் புகைப்படம் ஒன்றை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள். அது என்னவென்றால், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் அபிராமி அஜித் படம் போட்ட டீ ஷர்ட்டை அணிந்து இருந்தார். அப்போது அவர் நேர்கொண்ட படத்தில் நடித்து இருந்தார். அதனால் அவர் அந்த டீ சர்ட் அணிந்திருந்தார். தற்போது அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி விஜய் படம் போட்ட டீஷர்ட் அணிந்திருக்கிறார்.

தற்போது விஜய் படம் போட்ட டீ ஷர்ட்:

தற்போது அந்த புகைப்படத்தை ரசிகர்கள் பதிவிட்டு ஏன் விஜய் டி ஷர்ட்டை போட்டிருக்கிறீர்கள்? நீங்கள் விஜய் ரசிகையா? ஒருவேளை விஜய் படத்தில் நடித்துவிட்டு தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறீர்களா? விஜய் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள பீஸ்ட் படத்தில் நடித்திருக்கிறாரா? இல்லை இனிமேல் நடிக்க போகிறாரா? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கமெண்டில் போடுங்கள்.

Advertisement