பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஐந்தாம் வாரம் கடந்து உள்ளது. நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். தமிழில் புது வித்தியாசமான கான்செப்டில் விஜய் டிவி தமிழில் அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் அல்டிமேட். இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ottயில் ஒளிபரப்பானது. இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வருகிறார்கள்.
மேலும், நிகழ்ச்சியில் இருந்து முதலில் சுரேஷ் சக்ரவர்த்தி எலிமினேட் ஆகி இருக்கிறார். அதனை தொடர்ந்து இரண்டாம் வாரத்திற்கான எவிக்ஷனில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் சுஜா வருணி வெளியேறி இருந்தார். இதனை தொடர்ந்து மூன்றாவது வாரம் அபிநய் மற்றும் ஷாரிக் வெளியேறி இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் மூன்றாம் வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விக்ரம் பட சூட்டிங் நேரம் ஒதுக்க முடியாத காரணத்தினால் நிகழ்ச்சியில் இருந்து கமல் வெளியேறினார். அதோடு கமல் வெளியேறியதை தொடர்ந்து வனிதாவும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி:
தற்போது BB அல்டிமேட்டின் தொகுப்பாளராக சிம்பு களமிறங்கி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, முதல் நாளே அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி புகை பிடிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது. பின் அபிராமி, நிரூப்பின் முன்னாள் காதலி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே அபிராமி- நிரூப் குறித்த மீம்ஸ்களும், இவர்களுடைய பிரேக்கப் குறித்த சர்ச்சைகளும் தான் அதிகமாக போனது. பின் இருவரும் நல்ல நண்பர்கள் என்று அறிவித்து விட்டார்கள். பிறகு நிகழ்ச்சியில் அபிராமி – நிரூப் இடையே பல கலவரங்கள் வெடித்தது.
அபிராமி காதலித்த நபர்கள்:
இந்தநிலையில் அபிராமி பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், அபிராமி காதலித்த நபர்களின் வயதும், அபிராமி வயது குறித்த செய்தி தான் வெளியாகியுள்ளது. அபிராமி 9.3.1989 பிறந்தவர். அபிராமி முதன் முதலாக நிரூப்பை காதலித்தது அனைவருக்கும் தெரிந்ததே. இவர்கள் இருவரும் முதலில் ஒரு ஹோட்டலில் சந்தித்திருக்கிறார்கள். பின் சந்தித்த இரண்டு நாட்களிலேயே அபிராமி நேரில் பேச வேண்டும் என்று சொல்லி நிரூப்பை வரவழைத்து இருக்கிறார்.
அபிராமி – நிரூப் இடையே வயது வித்தியாசம்:
பின் இருவரும் சந்திக்கும்போது அபிராமி தான் முதன் முதலாக நிரூப் இடம் தன் காதலை சொல்லியிருக்கிறார். நிரூப் 6.08.1993 பிறந்தவர். நிரூப் தன்னுடன் வயதில் சின்னவன் என்று தெரிந்தும் அபிராமி நிரூப்பை காதலித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போது தான் இவர்கள் காதலித்ததும், பிரேக் அப் ஆனது தெரிந்தது. இதை இவர்களே பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியிருந்தார்கள். இதற்குப் பின் அபிராமி அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முகெனை காதலித்திருந்தார். ஆனால், முகேன் அபிராமியை காதலிக்கவில்லை, நாம் நல்ல நண்பர் என்று கூறியிருந்தார்.
முகென்-பாலாஜி வயது:
முகென் 20. 10. 1995 பிறந்தவர் ஆவார். தற்போது அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி – பாலாஜி காதலிப்பதாக பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இவர்கள் இருவரும் பழகுவதும் காதல் என்று தான் பலரும் கூறுகிறார்கள். பிக்பாஸ் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி இவர்கள் இருவரும் காதலிப்பதாக தான் பேசப்பட்டு வருகிறது. அதேபோல் பாலாஜி 2 .12. 1995 பிறந்தவர். இப்படி அபிராமி காதலிக்கும் நபர்கள் எல்லாம் அபிராமியை விட வயதில் சிறியவர்களாக உள்ளார்கள். இப்படி சிறுவயது நபர்களையே அபிராமி காதலித்திருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.