பிக் பாஸ் பிரபலம் அபிஷேக் ராஜ் இரண்டாவது திருமணம் செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருந்தாலும் யூடுயூபில் விமர்சனங்களை பார்க்கும் நெட்டிசன்களுக்கு அபிஷேக் ராஜாவை பற்றி நிச்சயம் தெரிந்து இருக்கும். யூடுயூபில் தன்னை ஒரு அதி மேதாவி போல உணர்ந்து கொண்டு பிரபலங்களிடம் அடிக்கடி மொக்கை வாங்கி கொண்டு, சினிமா பையன் என்று தனக்கே செல்லப் பெயர் வைத்துகொண்ட அபிஷேக்கை அறியாத வலைதள வாசிகள் இருக்க முடியாது.

யூடுயூப் விமர்சனகள் மூலம் பிரபலமான இவர் பின்னர் நயன்தாரா நடித்த ‘இமைக்க நொடிகள்’ படத்தில் கூட நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் 5ல் போட்டியாளராகவும் கலந்துகொண்டார். பொதுவாகவே பிக்பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் உள்ளே சென்று அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் பொறுத்து தான் வெறுப்பை சம்பாதிப்பார்கள். ஆனால், அபிஷேக் பல பேரின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டு தான் நிகழ்ச்சியின் உள்ளே சென்று இருந்தார்.
அபிஷேக் ராஜா குறித்த தகவல்:
அதிலும் இவர் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்ட விதத்தை பார்த்து பலரும் இவரை கழுவி கழுவி ஊற்றினார்கள். இதனாலே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சீக்கிரமாகவே வெளியேறி இருந்தார். பின் வைல்ட் கார்ட் என்றி மூலம் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் நுழைந்து இருந்தார். மீண்டும் மாறாமல் அதே திமிரு, அடாவடித்தனம், அடித்து பேசுவது என்று தேவையில்லாமல் வேலைகளை செய்து மீண்டும் வெளியேறினார் அபிஷேக்.

அபிஷேக் திருமணம்:
மேலும், அபிஷேக்கிற்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆன விஷயமே பிக் பாஸுக்கு பின்னர் தான் தெரியவந்தது. இவர் தீபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து இருந்தார். திருமணம் ஆன சில வருடங்களில் இருவருக்கும் விவகாரத்து நடந்தது. இதைப் பற்றி இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட பேசியிருந்தார். விவாகரத்து வாங்கிய பின்னர் இது ஒரு பிரவுட் டைவர்ஸ் என்று பேசியிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அபிஷேக்:
அதுமட்டுமில்லாமல் இவர் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருந்தார். இவர் ஜிவி பிரகாஷை வைத்து ஆல்பம் பாடலை இயக்கியிருந்தார். இதை அடுத்து இவர் ஜாம் ஜாம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த நிலையில் அபிஷேக் ராஜா தன்னுடைய காதலியை இரண்டாம் திருமணம் செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அபிஷேக் இரண்டாம் திருமணம்:
அதாவது, இவர் சுவாதி என்பதை என்பவரை காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன்பே சோசியல் மீடியாவில் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு அறிவித்திருந்தார். இந்த நிலையில் அபிஷேக் ராஜா- சுவாதி இருவருக்குமே இன்று திருமணம் நடந்திருக்கிறது. இது இவருடைய இரண்டாவது திருமணம் என்பதால் எளிமையாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மட்டுமே நடந்து இருக்கிறது. தற்போது இவருடைய திருமண புகைப்படம் வைரலானதை தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.